விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
கெளதம்மேனன்-விக்ரம் இணையும் துருவ நட்சத்திரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே பர்ஸ்ட்லுக், டீசர் வெளியிடப்பட்டது. அஜீத் பாணியில் விக்ரமும் சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் நடிப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. மேலும், இப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக மணிரத்னத்தின் காற்று வெளியிடை பட நாயகி அதிதி ராவ் ஹைதரி நடிக்கிறார். துருவ நட்சத்திரம் படப்பிடிப்பு ஏற்கனவே கொடைக்கானலில் நடைபெறு வதாக இருந்தது. பின்னர் அது கைவிடப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் ஓசூரில் படப்பிடிப்பை தொடங்கியிருக்கிறார் கெளதம்மேனன். அங்கு சில தினங்கள் நடத்தி விட்டு அதையடுத்து குன்னூரில் படப்பிடிப்பு தொடர்கிறதாம். ஆக, பிப்ரவரி மாதம் 5-ந்தேதி வரை விக்ரமை வைத்து படப்பிடிப்பு நடத்துகிறாராம் கெளதம்மேனன். அதையடுத்து அவர் பிப்ரவரி 6-ந்தேதி முதல் விஜயசந்தர் இயக்கும் படத்தில் நடிப்பதால் அந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்தபிறகு அடுத்தகட்ட படப்பிடிப்பை நடத்து கிறாராம் கெளதம்மேனன்.