ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மாயா படத்தை அடுத்து இமைக்கா நொடிகள் படத்திலும் குழந்தைக்கு அம்மாவாக நடித்து வருகிறார் நயன்தாரா. இந்த படத்தில் முதன்முதலாக போலீஸ் வேடத்தில் நடிக்கும் அவருக்கு தனது 4 வயது மகளுடன் பாச உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் செண்டிமென்ட் காட்சிகளும் நிறைய உள்ளதாம். அந்த வகையில், தனது மகளாக நடிக்கும் மானஸ்வியுடன் நிஜ அம்மாவாகவே மாறி நடித்திருக்கிறாராம் நயன்தாரா.
மேலும், இந்த படத்தில் மானஸ்வியின் நடிப்பில் இயல்புத்தன்மை வெளிப்பட வேண்டும் என்பதற்காக படப்பிடிப்பில் அவருடன் அன்போடு பழகினாராம் நயன்தாரா. அதோடு, மானஸ்விக்கு தினமும் அவர் கேட்ட சாக்லெட்டுகள், பொம்மைகள் வாங்கிக்கொடுத்த நயன்தாரா, ஒருநாள் அவர் லிப்ஸ்டிக் கேட்டபோது, அவர் கேட்ட கலரில் அடுத்த நாளே வாங்கிக்கொடுத்தாராம். அப்படி அவர் மானஸ்வியிடம் பாசமாக பழகியதால், முதலில் காட்சிகளில் மட்டுமே அவரை அம்மா அம்மா என்று சொல்லி நடித்த மானஸ்வி, பின்னர் நிஜத்திலும் அம்மா என்றுதான் அழைத்தாராம். அதன்காரணமாக, இமைக்கா நொடிகளில் நயன்தாரா-மானஸ்வியின் அம்மா மகள் செண்டிமென்ட் காட்சிகளும் நன்றாக ஒர்க்அவுட்டாகி உள்ளதாம்.