நம்ப முடியவில்லை : ‛கீதா கோவிந்தம்' குறித்து ராஷ்மிகா மகிழ்ச்சி பதிவு | 78 கோடியில் சொகுசு பங்களா வாங்கிய தனுஷ் பட நடிகை | அஜித் 64வது படம் எந்த மாதிரி கதை : ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல் | கூலி படத்தில் அமீர்கானை வீணடித்து விட்டார்கள் : ரசிகர்கள் ஆதங்கம் | ஆகஸ்ட் 22-ல் ஓடிடியில் வெளியாகும் தலைவன் தலைவி | லிவ்-இன் உறவுகள் பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும் : கங்கனா | அப்படி நடித்ததால் ரசிகர்கள் வெறுத்தனர் : அனுபமா பரமேஸ்வரன் | சினிமாவில் 50... வாழ்த்திய பிரதமர் மோடி : நன்றி தெரிவித்த ரஜினி | கூலி படத்தில் மிரட்டிய சவுபின் ஷாகிர், ரச்சிதா ராம் : இவங்க பின்னணி தெரியுமா? | சில கோடி செலவில் ‛கேப்டன் பிரபாகரன்' ரீ ரிலீஸ் : கில்லி மாதிரி வெற்றியை கொடுக்கமா? |
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.,-ன் 100வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நடிகர் சங்கம் சார்பில் நடிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர்., சமாதிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் தி.நகர் ஹபிபுல்லா ரோட்டில் அமைந்துள்ள நடிகர் சங்க அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் நாசர் பேசியதாவது... ‛‛தமிழகமே மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 100வது பிறந்த நாள் விழாவை கொண்டாடுகிறது. எங்களுக்கு இந்த ஒரு சங்கத்தை உருவாக்கி அதற்கு ஒரு அடையாளம் கொடுத்து முகவரியும் கொடுத்து மிக பிரமாண்டமாக வழி அமைத்து கொடுத்தவர் எம்.ஜி.ஆர். அவருடைய பிறந்தநாளை இந்த வருடம் முழுவதும் நாங்கள் கொண்டாட இருக்கிறோம். அவரால் நாம் பெருமைப்படுவோம் என்றார் நாசர்.
விஷால் பேசுகையில்... புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழா. புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் பற்றி தமிழ் நாடு மட்டுமல்ல ஊர் உலகமே அறிந்த ஓர் விஷயம். மக்களுக்காக அவர் பாடுபட்டு , மக்களுக்காக அவர் செய்த விஷயங்களை இன்று வரை அனைவரும் கொண்டாடி வருகிறார்கள். இன்று நடிகர் சங்கம் முன்னால் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதில் பெருமை கொள்கிறோம். எம்.ஜி.ஆர் அவர்களின் செயல்பாடு போல் நாமும் நடக்க கற்றுக்கொள்ள வேண்டும். என்னால் முடிந்த அளவுக்கு நான் இன்று சமூக பணியாற்ற உந்துதலாக இருந்தவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., தான் என்றார் நடிகர் விஷால்.