ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இரண்டாம் உலகம், 'பெங்களூர் டேஸ்' 'இஞ்சி இடுப்பழகி', 'தோழா' முதலான படங்களை தயாரித்த 'பிவிபி சினிமாஸ்' நிறுவனம் 'மேட்னி என்டர்டெயின்மென்ட்' என்ற நிறுவனத்துடன் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் 'காஸி'. ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் உருவாகிய இப்படத்தை தமிழிலும் 'காஸி' என்ற பெயரில் டப் செய்து வெளியிட உள்ளது பிவிபி நிறுவனம். சங்கல்ப் என்று அறிமுக இயக்குனர் எழுதி, இயக்கியிருக்கும் காஸி படம் 1971-ல் நடந்த இந்தியா - பாகிஸ்தான் போர் பின்னணியை வைத்து உருவாக்கப்பட்ட கதை.
இந்த படத்தில் தெலுங்குப்பட ஹீரோ ராணா இராணுவ அதிகாரியாக முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். கதாநாயகியாக டாப்சி நடித்துள்ள இந்தப் படத்தில் சமீபத்தில் மறைந்த பாலிவுட் நடிகர் ஓம்புரியும் நடித்திருக்கிறார். மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் பிப்ரவரி மாதம் வெளியாகிறது. 'காஸி' படத்தை ஹிந்தியில் பாலிவுட் பட இயக்குநர் கரண் ஜோஹர் வெளியிடுகிறார்.