Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா: திரையுலகம் சார்பில் ஓர் ஆண்டு கொண்டாடப்படுகிறது

13 ஜன, 2017 - 10:53 IST
எழுத்தின் அளவு:
Tamil-cinema-to-celebrate-MGRs-100th-birthday-this-year-fully

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு வருகிற 17ந் தேதி தொடங்குகிறது. இதனை பல அமைப்பினரும் தனித்தனியாக கொண்டாட இருக்கிறார்கள். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அதிமுக தலைவர், தமிழக முதல்வர் என்றாலும் அடிப்படையில் அவர் சினிமாவில் சூப்பர் ஸ்டார். எனவே அவரது நூற்றாண்டை சிறப்பாக கொண்டாட தமிழ் திரையுலகம் முடிவு செய்திருக்கிறது.


இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று தயாரிப்பாளர் சங்கத்தில் நடந்தது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, துணை தலைவர் கதிரேசன், இயக்குனர்கள் சங்கத் தலைவர் விக்ரமன், பொதுச் செயலாளர் ஆர்.கே.செல்வமணி, இணை செயலாளர் லிங்குசாமி, தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணை தலைவர் பொன் வண்ணன், தென்னிந்திய திரைப்படவர்த்தக சபை பொதுச் செயலாளர் காட்டரகட்ட பிரசாத், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் ரோகினி பன்னீர் செல்வம். சென்னை மாநகர திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன், விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் அருள்பதி, பெப்சி தலைவர் ஜி.சிவா. செயலாளர் செல்வராஜ், இயக்குனர்கள் பாரதிராஜா, கே.பாக்யராஜ் ஆகியோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது: மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் எங்கள் திரையுலகத்தை சேர்ந்தவர். அவரது நூற்றாண்டை சினிமாவில் உள்ள அனைத்து அமைப்புகளும் ஒருங்கிணைந்து பிரமாண்டமாக கொண்டாட இருக்கிறோம். வருகிற 17ந் தேதி அபிராமி தியேட்டரில் இதன் துவக்க விழா நடக்கிறது. இதில் திரையுலக முன்னணியினர் திரளாக கலந்து கொள்கிறார்கள்.


வருகிற 17ந் தேதியிலிருந்து 2018ம் ஆண்டு ஜனவரி 17ந் தேதி வரை ஒரு ஆண்டுக்கு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை கொண்டாடுகிறோம். என்ன மாதிரியான நிகழ்ச்சிகள், யார் யார் பங்கேற்கிறார்கள் என்ற விபரத்தை விரைவில் அறிவிப்போம். என்றனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in