ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அழகிய தமிழ் மகன் படத்திற்கு பிறகு நடிகர் விஜய்யும், இயக்குநர் பரதனும் மீண்டும் கூட்டணி அமைத்து உருவாகியுள்ள படம் ‛பைரவா'. விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். முதன்முறையாக விஜய் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். பைரவாவில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
பைரவா படம் எந்த மாதிரியான கதையம்சம் உடைய படம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது படத்தில் ஒரு முக்கியமான சமூக பிரச்னையை கையில் எடுத்திருக்கிறாராம் விஜய். இந்தப்படத்தின் விஜய் பேசும் வசனங்கள், அவர் வரும் காட்சிகள், சண்டைக்காட்சிகள்... என ஒவ்வொன்றும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெறும் என்கிறார்கள்.
அதிலும் விஜய், கோர்ட்டில் பேசும் வனசங்கள் அனல் தெறிக்கும் என்று பைரவா படக்குழு தெரிவித்திருக்கிறது. மேலும் இதுநாள் வரை காஸ்டியூம், ஸ்டைல் உள்ளிட்ட விஷயங்களில் தலையிடாத விஜய், பைரவா படத்தில் தனது ஹேர்ஸ்டைல், காஸ்டியூம் டிசைன் உள்ளிட்ட அனைத்திலும் விஜய் அதிக மெனகெட்டுள்ளாராம். பெற்றோர்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படமாக பைரவா இருக்கும் என படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.
2017ம் ஆண்டின் முதல் பிரம்மாண்ட வெளியீடாக பைரவா படம் இந்த பொங்கல் விருந்தாக ஜன., 12-ம் தேதி வெளியாக உள்ளது. வரலாம் வரலாம் வா பைரவா...!