ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இரட்டை இயக்குனர்கள் புஷ்கர் - காயத்திரி இயக்கும் படம் விக்ரம் வேதா. விஜய் சேதுபதி, மாதவன், ஷரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி, ஜான் விஜய், கதிர், பிரேம் நடிக்கிறார்கள். சாம் சி.எஸ் இசை அமைக்கிறார். பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்கிறார்.
ஓரம்போ, வா கட்டிங் படங்களை இயக்கிய புஷ்கர் - காயத்ரி ஜோடி அந்த படங்களை போலவே இதிலும் சென்னையின் அண்டர்கிரவுண்ட் உலகத்தை காட்டுகிறது. இதில் விஜய்சேதுபதி தாதாவாக நடிக்கிறார். அவரை வேட்டையாடத் துடிக்கும் போலீஸ் அதிகாரியாக மாதவன் நடிக்கிறார். இருவருக்குள்ளும் நடக்கும் ஆடுபுலி ஆட்டம் தான் கதை. இருவருக்குமே சமமான வாய்ப்பு இருக்கிறது. விக்ரம் என்பது மாதவன் பெயர், வேதா என்பது விஜய் சேதுபதி பெயர்.
விக்ரமாதித்தன் கதைகளில் ஒன்றின் மார்டன் வெர்ஷன்தான் படம். விஜய்சேதுபதி வேதாளம், மாதவன் விக்ரமாதித்தன். ஒவ்வொரு முறையும் விக்ரமாதித்தன் வேதாளத்தை பிடிக்க நினைப்பதும் வேதாளம் தந்திரமாக தப்பிப்பதும்தான் திரைக்கதை. படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. பின்னணி இசை கோர்ப்பு மற்றும் டப்பிங் பணிகள் நடந்து வருகிறது. பிப்ரவரியில் வெளிவரலாம் என்று தெரிகிறது.