ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
பசங்க படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுமான கிஷோர் அதன் பிறகு சில படங்களில் நடித்தாலும் கோலிசோடா ஒரு அடையாளத்தை கொடுத்தது. அதன்பிறகு வஜ்ரம் படத்தில் நடித்தார். எதிர்கொள் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். என்றாலும் அதில் பிளஸ் 2 மாணவராக நடித்தார். தற்போது அவர் முழுமையான ஷோலோ ஹீரோவாக பயந்தாங்கோழி என்ற படத்தில் நடிக்கிறார்.
கோலிசோடா படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய லெனின் இயக்குகிறார். பாபுநாத் மற்றும் லிஜோ இசை அமைக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் நட்டியின் உதவியாளர் எஸ்.கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. ஸ்ரீதேவர் பிக்சர்ஸ் தயரிக்கிறது.
மற்றவர்களால் பயந்தாங்கோழி என்று ஒதுக்கித் தள்ளப்படும் ஒருவன் ஒரு பிரச்சினைக்காக பொங்கி எழுந்து அதில் வெற்றி பெறுகிற கதை. சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதான் படத்தின் ஒன்லைன். வருகிற 12ந் தேதி படப்பிடிப்பு தொடங்குகிறது.