ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பூஜை படத்திற்கு பிறகு சூர்யாவை வைத்து சிங்கம்-3 படத்தை இயக்க ஒரு வருடத்திற்கு மேலாக காத்துக்கொண்டிருந்ததால், ஹரி இயக்கத்தில் இரண்டு வருடங்களாக எந்த படமும் திரைக்கு வரவில்லை. இந்நிலையில், தற்போது சிங்கம்-3 ஜனவரி 26-ந்தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஏற்கனவே விக்ரமை வைத்து 2003ல் சாமி படத்தை இயக்கிய ஹரி, தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க தயாராகிக்கொண்டிருக்கிறார். முந்தைய சாமியை விட இந்த சாமி அதிரடி போலீசாக களமிறங்குகிறாராம்.
மேலும், இந்த படத்தில் நடிப்பதற்கான நடிகர் - நடிகை தேர்வு தற்போது நடந்து கொண்டிருக்கிறது. அதனால் ஹரி படத்தில் நடிக்க விரும்பும் சில நடிகைகளும், விக்முடன் நடிக்க விரும்பும் நடிகைகளும் அந்த படத்தில் இடம் பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அந்த பட்டியலில், சமந்தா, காஜல்அகர்வால், கீர்த்தி சுரேஷ் போன்ற நடிகைகளின் பெயர்கள் முதலிடம் பிடித்திருப்பதாக தெரிகிறது. இவர்களில் விக்ரமுடன் பத்து எண்றதுக்குள்ள படத்தில் நடித்த சமந்தா மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரில் ஒருவர் சாமி-2வில் நடிக்க அதிக வாய்ப்பிருப்பதாக டைரக்டர் ஹரி வட்டாரம் கூறுகிறது.