ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த பிரமாண்ட சரித்திர படம் ‛பாகுபலி'. ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நாசர், சத்யராஜ், ரோகினி என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வெளிவந்த இப்படத்தின் இரண்டாம் பாகம், முதல்பாகத்தை விட இன்னும் பிரமாண்டமாய் உருவாகி வந்தது. இதனால் பாகுபலி-2விற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடந்து வந்த பாகுபலி-2 படத்தின் படப்பிடிப்பு நேற்றோடு முடிந்தது. தற்போது போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. படம் ஏப்ரல் மாதம் வெளிவர இருக்கும் நிலையில், பாகுபலி படத்தின் முதல்பார்வை எனப்படும் டீசரை இம்மாதம் வெளியிட இருக்கிறார்கள். அதுவும் ஷாரூக்கான் நடித்து வெளியாக உள்ள ரயீஸ் படத்துடன் பாகுபலி-2 டீசர் வெளியாக இருக்கிறது. ரயீஸ் படம் வருகிற ஜன., 25-ம் தேதி ரிலீஸாகிறது. அன்றைய தினமே பாகுபலி-2 டீசரும், ரயீஸ் ஓடும் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது.