வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் |
வாரிசு நடிகர்களில் சற்று பின்தங்கிய நிலையில் இருப்பவர் கௌதம் கார்த்திக்தான். மணிரத்னம் அறிமுகப்படுத்தியும் கூட இன்னும் க்ளிக் ஆகாமலே இருக்கிறார்.
இந்நிலையில் 'கலைப்புலி' எஸ்.தாணு தயாரிப்பில், அவரது மகன் கலாபிரபு இயக்கத்தில் 'இந்திரஜித்' என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார் கௌதம் கார்த்திக். இந்தப்படம் விரைவில் வெளியாகிறது. அதற்கான வேலைகளில் இறங்கிவிட்டார் தாணு.
இந்திரஜித் படம் தவிர கண்ணன் இயக்கத்தில் 'இவன் தந்திரன்' என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார் கௌதம் கார்த்திக். தற்போது இந்த படத்தின் டப்பிங் வேலைகள் நடந்து வருகிறது. இந்த படங்களுடன் ராஜதுரை இயக்கத்தில் முத்துராமலிங்கம் என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் அறிமுக இயக்குனர் ஆறுமுக குமார் என்பவரது இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் கௌதம் கார்த்திக். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட இயக்குனர் பாலாஜி தரணீதரனிடம் உதவியாளராக பணியாற்றியவர் ஆறுமுக குமார். இவர் இயக்கும் இந்த படமும் 'இந்திரஜித்' படம் மாதிரி ஆக்ஷன் அட்வென்ஞ்சர் கதையாம்.
இந்த படத்தில் இரண்டு கதாநாயகர்கள் நடிக்க இருக்கிறார்கள். கௌதம் கார்த்திக் உடன் இணைந்து நடிக்க உள்ள இன்னொரு கதாநாயக நடிகருக்கான தேர்வு மற்றும் கதாநாயகிகளின் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.