சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
விஷால் பிலிம் பேக்டரி சார்பில் விஷால் தயாரித்து நடிக்கும் படம் துப்பறிவாளன். மிஷ்கின் இயக்குகிறார். இதில் விஷாலுடன், வினய், பிரசன்னா உள்பட பலர் நடிக்கிறார்கள். கே.பாக்யராஜ் வில்லனாக நடிக்கிறார். இதில் அக்ஷ்ராஹாசன் நடிப்பதாக இருந்தது. ஆனால் தற்போது அவர், தந்தை கமல்ஹாசன் மாடிப்படியிலிருந்து தவறி விழுந்து கால் எலும்பு முறிந்ததில் அவர் நடித்து வந்த சபாஷ் நாயுடு படப்பிடிப்பு முடங்கியுள்ளது.
இந்த படத்தின் துணை இயக்குனராக அக்ஷ்ராஹாசன் பணியாற்றி வருகிறார். படத்தின் இயக்குனரும் உடல் நலமில்லாமல் போகவே கமல்ஹாசனே இயக்கய வேண்டிய சூழ்நிலை. இதனால் தற்போது தந்தைக்கு உதவியாக அவர் கூடவே இருக்க வேண்டி இருப்பதால் துப்பறிவாளனுக்கு கொடுத்திருந்த தேதியில் அக்ஷ்ராவல் நடிக்க முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. எனவே துப்பறிவாளன் படத்திலிருந்து அக்ஷ்ரா ஹாசன் விலகி கொண்டதாக கூறப்படுகிறது.
இதனால் அக்ஷ்ராவுக்கு பதிலாக இப்போது ஆண்ட்ரியா நடிப்பதாக தகவல். ஆக்ஷன் கலந்த போலீஸ் அதிகாரி கேரக்டர் என்பதால் ஆண்ட்ரியா தேர்வு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. துப்பறிவாளன் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் நடக்கிறது. அதில் ஆண்ட்ரியாக கலந்து கொண்டு நடிக்கிறார்.