14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
நடராஜ் நடித்த சதுரங்க வேட்டை படத்தை இயக்கியவர் வினோத். அதையடுத்து தற்போது அரவிந்த்சாமி- திரிஷா நடிப்பில் தயாராகியுள்ள சதுரங்க வேட்டை-2 படத்திற்கு கதை வசனம் எழுதியிருக்கும் அவர், அதற்கடுத்து கார்த்தி நாயகனாக நடிக்கும் தீரன் அதிகாரம் ஒன்று -என்ற படத்தை இயக்குகிறார். காஷ்மோரா, காற்று வெளியிடை படங்களைத் தொடர்ந்து இந்த படத்தில் க்ரைம் திரில்லர் கதையில் நடிக்கிறார் கார்த்தி.
மேலும், இதற்கு முன்பு சிவா இயக்கிய சிறுத்தை படத்தில் போலீசாக நடித்த கார்த்தி, வினோத் இயக்கும் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் சிபிஐ போலீசாக நடிக்கிறார். கெளதம்மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்த காக்க காக்க படம் பாணியில் அதிரடி போலீஸ் கதையில் தயாராகும் இந்த படத்தில் படப்பிடிப்பு ஜனவரி 26-ந்தேதி முதல் புனே, மேற்கு வங்காளம் என வடஇந்தியாவில் தொடர்ந்து நடைபெறுகிறதாம். இந்த படத்திற்காக தற்போது உடல் எடையை கணிசமான அளவு குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் கார்த்தி.