ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பொங்கலுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில், பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்னதாகவே 'பைரவா' படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்துடன் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'ப்ரூஸ் லீ', சாந்தனு, பார்த்திபன் நடித்துள்ள 'கோடிட்ட இடங்களை நிரப்புக', விஜய் சேதுபதி நடித்துள்ள 'புரியாத புதிர்' ஆகிய படங்களும் வெளிவர உள்ளன.
'ப்ரூஸ் லீ' படம் முடிக்கப்பட்டு சில மாதங்களாகியும் வெளிவராமல் முடங்கி இருந்தது. ஜி.வி.பிரகாஷ் நடித்து அடுத்தடுத்து படங்கள் வெளிவந்ததால் இந்தப் படம் அப்படியே கிடந்தது. ஒரு வழியாக பொங்கலுக்கு படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்கள். இருந்தாலும் ஜி.வி.பிரகாஷ் நடித்த ஒரு படம் கூட கடந்த ஆண்டு வெற்றி பெறவில்லை என்பது 'ப்ரூஸ் லீ' படத் தயாரிப்பாளர்களுக்கு கலக்கத்தைக் கொடுத்துள்ளது.
பார்த்திபன் இயக்கியுள்ள 'கோடிட்ட இடங்களை நிரப்புக' படத்தில் சாந்தனு நாயகனாக நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் இன்னும் வெற்றிக் கோட்டை எட்டிப் பார்க்க முடியாத நிலையில் இருப்பவர்தான் சாந்தனு. இந்தப் படமாவது தன்னை ஒரு நாயகனாக அடையாளம் காட்டும் என நம்பிக் கொண்டிருக்கிறார்.
இதனிடையே, 'பைரவா' படத்துடன் சேர்த்து ஜி.வி.பிரகாஷ்குமார், சாந்தனு ஆகியோர் நடித்துள்ள படங்கள் வெளிவந்தால் தாக்குப் பிடிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
'ப்ரூஸ் லீ' படத்தை பொங்கலுக்கு வெளியிடுகிறோம் என்ற அறிவிப்பு வந்த உடனேயே, ஜி.வி.பிரகாஷ் “அண்ணா, உங்களோட வர்றோம்ணா' என்றும் 'பொங்கல் அன்று இளையதளபதி படத்தைத்தான் முதல்ல பார்ப்பேன்' என்றும் சமாளித்துக் கொண்டிருக்கிறார். சாந்தனுவோ, “பைரவா' படத்துக்கு டிக்கெட் கிடைக்காதவங்க அப்படியே எங்க படத்துக்கு வாங்க' என வேண்டுகோள் வைக்கிறார்.
இருந்தாலும், விஜய் படத்துடன் இவர்கள் மோதுவது குறித்து சமூக வலைத்தளங்களில் பல சுவாரசியமான மீம்ஸ்கள் வந்து கொண்டேயிருக்கின்றன.