ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இயக்குநர் சஞ்சய் குப்தா இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன், யாமி கவுதம் நடித்துள்ள படம் ‛காபில்'. இருவரும் கண்பார்வையற்றவர்களாக நடித்திருக்கிறார்கள். இப்படம் வருகிற 25-ம் தேதி ரிலீஸாக உள்ளது. இதனால் படத்தின் புரொமோஷன் வேலையில் பிஸியாக இருக்கிறார் ஹிருத்திக். இதேப்போன்று அன்றைய தினம் ஷாரூக்கான், ராகுல் தொலாக்கியா இயக்கத்தில் நடித்துள்ள ரயீஸ் படமும் வெளியாக இருக்கிறது. இதனால் ஷாரூக்கான் மற்றும் ஹிருத்திக்கின் அப்பா ராகேஷ் ரோஷன் இடையே ஒருவிதமான பனிப்போர் நடந்து வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த காபில் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹிருத்திக்கிடம், காபில், ரயீஸ் பட மோதலால் உங்களுக்கும், ஷாரூக்கானுக்கும் இடையே மோதலா..? என்று பத்திரிகையாளர்கள் கேட்டனர்.
இதற்கு பதிலளித்து ஹிருத்திக் கூறியதாவது... ‛‛இருபடங்களின் மோதலால் எங்களுக்கு இடையேயான நட்பில் எந்த பாதிப்பும் இல்லை. இது தொழில் ரீதியான போட்டி மட்டும் தான். தொழில் தொழில் தான், நட்பு நட்பு தான். ருஸ்டம் - மொகஞ்சதரோ படமும் ஒரேநாளில் தான் மோதியது, ஆனால் எனக்கும், அக்ஷ்ய்க்கும் இடையேயான நட்பில் எந்த மாற்றமும், விரிசலும் ஏற்படவில்லை'' என்றார்.