Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தும் கெளதம்மேனன்!

05 ஜன, 2017 - 09:37 IST
எழுத்தின் அளவு:
goutham-menon-wants-to-talk-to-nayanthara-to-cast-her-in-his-next-movie

இருமுகன் படத்தில்தான் விக்ரம்-நயன்தாரா இருவரும் முதன்முறையாக ஜோடி சேர்ந்தனர். அந்த படம் ஓரளவு வெற்றி பெற்றது. இந்நிலையில், தற்போது கெளதம்மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 2-ந்தேதி குன்னூரில் நடக்கயிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின. ஆனால், திட்டமிட்டபடி அப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறவில்லை.


மேலும், இந்த படத்தில் நாயகியாக நயன்தாரா நடித்தால்தான் பொருத்தமாக இருக்கும் என்பதால் அவரிடம் கால்சீட் கேட்டுள்ளார் கெளதம் மேனன். ஆனால் நயன்தாரா கேட்ட சம்பளம் கெளதம்மேனனுக்கு அதிர்ச்சியை கொடுத்து விட்டதாம். இருப்பினும், நயன்தாரா நடித்தால்தான் கதைக்கு பொருத்தமாக இருக்கும் என்பதால், சம்பளத்தை குறைத்துக்கொண்டு தனது படத்தில் நடிக்க வருமாறு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் கெளதம்மேனன்.


இந்நிலையில், திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடைபெறாத காரணத்தினால் டென்சனான விக்ரம், திடீரென்று துபாய்க்கு சென்று விட்டாராம். மேலும், கெளதம்மேனன்- நயன்தாராவிற்கிடையிலான பேச்சுவார்த்தை சுமூகமான நிலையை எட்டாதபட்சத்தில், ஜனவரி 26-ந்தேதி முதல் விஜயசந்தர் இயக்கும் படத்தில் விக்ரம் நடிப்பார் என்று தெரிகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in