பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
விரைவில் வெளிவர இருக்கும் படம் தாயம். புதுமுகங்கள் இணைந்து உருவாக்கி இருக்கிறார்கள். கண்ணன் ராமசாமி இயக்கி உள்ள படத்தை பியூச்சர் பிலிம் பேக்டரி சார்பில் ஏ.ஆர்.எஸ்.சுந்தர் தயாரித்துள்ளார். இந்த படம் ஒரே அறையில் நடக்கும் திகில் பேய் படம். இந்த படத்திற்கு குறும்படங்களுக்கு இசை அமைத்து வந்த சதீஷ் செல்வம் இசை அமைத்துள்ளார். இதன் பின்னணி இசை பணிகள் பிரான்ஸ் மற்றும், மாசிடோனியா நாடுகளில் நடந்துள்ளது.
இதுகுறித்து இசை அமைப்பாளர் சதீஷ் செல்வம் கூறியதாவது: ‛‛தாயம் படம் முழுவதும் ஒரே அறையில் படமாக்கப்பட்டிருப்பதால், அதற்கு இசை அமைப்பது என்பது சவாலாக இருந்தது. ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் படத்தின் பாணி மாறி கொண்டே இருக்கும் என்பதால் பின்னணி இசையில் அதிக கவனம் தேவைப்பட்டது. இசை என்பதை தாண்டி படத்தோடு பயணிக்கும் ஒரு கதாபாத்திரமாகவே பின்னணி இசை இருக்கும் . ஒரு தாய கட்டையில் இருக்கும் நான்கு பக்கங்களை போல தாயம் படத்தில் இருக்கும் நான்கு பாடல்களும் கதையை வலுப்படுத்தும்.
பின்னணி இசை அமைக்கும் பணி மற்றும் ரெக்கார்டிங் வேலைகள் எல்லாம் மாசிடோனியா நாட்டிலும், பிரான்ஸ் நாட்டில் உள்ள புகழ் பெற்ற பேமஸ் ஸ்டுடியோவிலும், பிரம்மாண்ட இசை குழுவினருடன் நடைபெற்றது. இந்த ஸ்டுடியோவில் லார்ட் ஆப் தி ரிங்ஸ் போன்ற பல ஹாலிவுட் திரைப்படங்கள் ரெகார்ட் செய்ய பட்டிருக்கிறது. படத்தை காண வரும் ரசிகர்களின் மனதில், படம் முடிந்த பின்பும், பின்னணி இசையின் தாக்கம் நீடித்து கொண்டே இருக்கும்''என்கிறார் சதீஷ் செல்வம்.