ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஆதித்யா சேனலில் டாடி எனக்கொரு டவுட் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் டவுட் செந்தில். அதையடுத்து, மாமோய் நீங்க எங்க இருக்கீங்க? என்ற நிகழ்ச்சி காமெடி பிளஸ் நடிப்பு என இரண்டுவிதமான பர்பாமென்ஸையும் கொடுக்கக்கூடிய நடிகர் என்கிற அங்கீகாரத்தை பெற்றிருக்கிறார்.
இதுபற்றி டவுட் செந்தில் கூறுகையில், டாடி எனக்கொரு டவுட் நிகழ்ச்சியில் நடித்து வந்தபோது சினிமாவிலும் சில படங்களில் நடித்தேன். அதில் ராதாமோகன் சாரின் உப்புக்கருவாடு முக்கியமான படம். அந்த படத்தில் காமெடியனாக நடித்த நான், க்ளைமாக்சில் படநாயகி நந்திதாவுக்கு ஜோடியாகி விடுவேன். யாருமே எதிர்பார்க்காத ஒரு க்ளைமாக்ஸ் அந்த படத்தில் அமைந்தது. அதை யடுத்து ஆதித்யா சேனலில் நானே கான்சப்ட் ரெடி பண்ணி நடித்து வரும் மாமோய் நீங்க எங்க இருக்கீங்க? என்ற தொடர் இன்னும் பெரிய அளவில் என்னை பிரபலப்படுத்தி வருகிறது.
அதாவது டவுட் செந்தில் என்றால் காமெடி மட்டும்தான் செய்வார் என்று இருந்து வந்த நிலை மாறி தற்போது நன்றாக நடிக்கவும் செய்வார் என்கிற பெயர் கிடைத்திருக்கிறது. ஆக, 2016-ம் ஆண்டில் எனக்கு காமெடியன் என்பதை தாண்டி நடிகன் என்கிற அங்கீகாரமும் கிடைத்துள்ளது. அதோடு, மாமோய் நீங்க எங்க இருக்கீங்க நிகழ்ச்சியை பார்த்துவிட்டு, காமெடியாக இருந்தாலும் அதில் ஒரு கருத்தும் உள்ளது என்று சொல்பவர்கள், என்னை பார்த்தாலே சிரிப்பு வருகிறது என்கிறார்கள். இதை பெருமையாக கருதுகிறேன். அதனால் தொடர்ந்து நேயர்களின் ரசனைக்கேற்ற நிகழ்ச்சிகளுக்கான கான்சப்ட் ரெடி பண்ணி நடித்து தொடர்ந்து நேயர்களின் மனதில் இடம் பிடித்திருக்க ஆசைப்படுகிறேன் என்கிறார் டவுட் செந்தில்.
மேலும், எனது மாமோய் நீங்க எங்க இருக்கீங்க மற்றும் வாலு பசங்க நிகழ்ச்சிகளில் என்னுடன் இணைந்து பங்கேற்று வரும் அகல்யா வெங்கடேசனை ஒரு வார இதழ் 2016ம் ஆண்டின் சிறந்த முதல் காமெடி தொகுப்பாளினி என்று தேர்வு செய்துள்ளது. இதுவும் எனக்கு பெரு மையாக உள்ளது என்கிறார் டவுட் செந்தில்.