2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

புதுமுகங்கள் இணைந்து 465 என்ற படத்தை உருவாக்கி வருகிறார்கள். "465 என்றால் இந்திய தண்டனை சட்டத்தின் ஒரு பிரிவு. இந்த பிரிவின் கீழ் வரும் தண்டனைகள் எந்த குற்றத்திற்கு உரியது. அந்த குற்றங்கள் எப்படி நிகழ்கிறது. அதற்கு பின்னணி என்ன என்பதை காரண காரியங்களோடு சொல்லும் திகில் படம் இது" என்கிறார் இயக்குனரும் ஹீரோவுமான சாய் சத்யம்.
இதில் சாய் சத்யம் ஜோடியாக புதுமுகம் நிரஞ்சனா நடிக்கிறார். இவர்கள் தவிர கார்த்திக்ராஜ், மனோபாலா, கிரேன் மனோகர் உள்பட பலர் நடிக்கிறார்கள். பிலிப்.ஆர்.சுந்தர் ஒளிப்பதிவு செய்கிறார். சஷாங் ரவிச்சந்திரன் இசை அமைக்கிறார். எல்.பி.எஸ் பிலிம்ஸ் சார்பில் எஸ்.எல்.பிரபு தயாரிக்கிறார். படப்பிடிப்புகள் மும்முரமாக நடந்து வருகிறது.