ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஜய் ஆண்டனி நடித்த சலீம், விஜயசேதுபதி நடித்த தர்மதுரை படங்களை தயாரித்தவர் ஸ்டுடியோ 9 ஆர்.கே.சுரேஷ். பாலா இயக்கத்தில் சசிகுமார் நாயகனாக நடித்த தாரைத்தப்பட்டை படத்தில் வில்லனாக நடித்த இவர், அதன்பிறகு மருது, தர்மதுரை ஆகிய படங்களிலும் நடித்தார். அதைத் தொடர்ந்து தனிமுகம், பில்லா பாண்டி, காக்க என பல படங்களில் வில்லன் மற்றும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், பாலாவின் தாரைத்தப்பட்டை படத்தில் வில்லனாக நடித்த ஆர்.கே.சுரேஷ், அடுத்தபடியாக பாலா இயக்கும் புதிய படத்திலும் ஒரு அதிரடியான வேடத்தில் நடிக்கிறாராம். அந்த படத்தில் நடிக்கும் நடிகர் -நடிகைகள் சம்பந்தப்பட்ட தேர்வு நடைபெற்று வரும் நிலையில், ஆர்.கே.சுரேஷின் பெயர் பட்டியலில் இடம்பெற்று விட்டதாம். மேலும், தாரைத்தப்பட்டை படத்தில் நார்மலான கெட்டப்பில் நடித்த அவர், இந்த புதிய படத்தில் ஒரு வித்தியாசமான கெட்டப்பில் நடிக்கயிருப்பதாகவும் கூறப்படுகிறது.