ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ரஜினி நடித்த ‛கபாலி' படம் தாய்லாந்து மொழியில் டப்பாகி வெளியாக உள்ளது. இந்தாண்டு வெளியான தமிழ் சினிமா படங்களில் ரஜினியின் ‛கபாலி' படம் முக்கியமானது. பா.ரஞ்சித் இயக்கிய இப்படத்தில் ரஜினிகாந்த் மலேசிய டானாக நடித்திருந்தார். அவருடன் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கிஷோர், கலையரசன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றதோடு, வசூலையும் வாரி குவித்தது. இந்நிலையில் கபாலி படம் தற்போது தாய்லாந்து நாட்டில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட இருக்கிறது.
ரஜினிக்கு இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக ஜப்பான் நாட்டில் ரஜினிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அவரது படங்கள் அங்கும் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. ஜப்பானை தொடர்ந்து தற்போது இந்த வரிசையில் தாய்லாந்தும் இணைந்துள்ளது. தாய்லாந்து நாட்டில் ரஜினி ரசிகர்கள் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர் என்பதால் கபாலி திரைப்படமானது அந்த நாட்டில் திரையிடப்பட உள்ளது. வரும் ஜனவரி மாதம் தாய்லாந்தில் உள்ள 30 பகுதிகளில் உள்ள சுமார் 100 தியேட்டர்களில் கபாலி வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.