ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
உதயன், சகுனி, மாஸ் போன்ற படங்களில் நடித்தவர் கன்னட நடிகை பிரணிதா. தற்போது எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இதில் ஜெய் நடிக்கும் எனக்கு வாய்த்த அடிமைகள் படத்தில் சிங்கிள் ஹீரோயினாக நடித்துள்ள பிரணிதா, அதர்வா நடிக்கும் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் படத்தில் நான்கு ஹீரோயினிகளில் ஒருவராக நடித்துள்ளார். அதோடு, இந்த இரண்டு படங்களிலுமே பாடல் காட்சிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு கிளாமர் உடையணிந்து நடித்துள்ளார் பிரணிதா.
மேலும், இதற்கு முன்பு தமிழில் நடித்த படங்கள் தன்னை ஏமாற்றியபோதும், இந்த புதிய படங்கள் வெற்றி பெற்று தமிழில் நிலையான இடத்தை பிடித்துக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கும் பிரணிதாவுக்கு ஒரு படத்திலேனும் டாக்டர் வேடத்தில் நடிக்க வேண்டும் என்பது லட்சியமாக உள்ளதாம். காரணம், அவரது அப்பா-அம்மா இரண்டு பேருமே பெங்களூரில் டாக்டர்களாக உள்ளார்களாம். ஒரே மகளான பிரணிதாவையும் டாக்டராக்க வேண்டும் என்பதுதான் அவர்களது ஆசையாக இருந்ததாம்.
ஆனால், பிரணிதாவுக்கு சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் இருந்ததால் அவரது ஆசைக்கு தடை போடாமல் நடிக்க சம்மதம் தெரிவித்து விட்டார்களாம். அதனால், நிஜத்தில் டாக்டராக முடியாதபோதிலும், டாக்டர் வேடத்தில் நடித்தாவது தனது பெற்றோரின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று தன்னை சந்திக்கும் டைரக்டர்களிடம் தனது விருப்பத்தை வெளிப்படுத்தி வருகிறார் பிரணிதா.