மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
'முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு' படம் மூலமாக தமிழ்சினிமாவில் நுழைந்த பூர்ணா, தான் நடித்துள்ள 'சவரக்கத்தி' படத்தை தற்போது ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்.. மனம் நிறைவான கேரக்டர் ஒன்றில் நடித்துவிட்டுத்தான் திருமணம் பற்றி நினைப்பேன் என்று கூறிய பூர்ணாவுக்கு இப்போதே 32 வயதாகிவிட்டது.. வீட்டில் மிக தீவிரமாக மாப்பிள்ளை தேடி வருகிறார்கள்.. ஆனால் மாப்பிள்ளை அவரது சொந்த ஊராகிய கேரளாவிலோ அல்லது பிழைக்க வந்த ஊரான தமிழ்நாட்டிலோ இல்லையாம்.. மாப்பிளை தேடும் படலம் நடப்பது வட இந்தியாவில் தானாம்..
தென்னிந்திய மொழிப்படங்களில் நடித்துவிட்ட பூர்ணாவுக்கு பாலிவுட் படங்களில் நடிக்காவிட்டாலும் கூட மிகவும் பிடித்தமான ஏரியா வட இந்தியா தானாம். அவரது மணவாளனும் ஒரு வட இந்தியராகத்தான் இருக்கவேண்டும் என்பது அவரது ஆசை.. பூர்ணா திருமணத்துக்கு ஒப்புக்கொண்டாலே போதும் என நினைத்த அவரது பெற்றோர் அவரது ஆசைக்கு பச்சைக்கொடி காட்டியதோடு, தீவிரமாக மாப்பிள்ளை தேடியும் வருகிறார்கள்.. பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தால், அதிலிருந்து இரண்டு வாரங்களுக்குள் திருமணம் நடத்திவிடவும் தயாராக இருக்கிறார்களாம். அதனால் எனது திருமணம் குறித்த அறிவிப்பை நானே முறையாக அறிவிப்பேன்.. அதுவரை கிசுகிசு எதுவும் வேண்டாம் என கேட்டுக்கொண்டுளார் பூர்ணா.