ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
நட்டி நடராஜ் நாயகனாக நடித்த சதுரங்கவேட்டை படத்தை தயாரித்தவர் நடிகர் மனோபாலா. அந்த படத்தின் ஹிட்டைத் தொடர்ந்து தற்போது சதுரங்க வேட்டை-2 படத்தை தயாரித்துள்ளார். முந்தைய படத்தை விட அதிக பட்ஜெட்டில் தயாராகியுள்ள இந்த படத்தில் அரவிந்த்சாமி, திரிஷா நடிப்பத்தாகத்தான் இதுவரை செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. ஆனால் இப்போது அதே படத்தில் பரத், பூர்ணா ஆகியோரும் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களில் நடிப்பதாக தகவல் கசிந்துள்ளது.
மேலும், இந்த படத்தில் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக திரிஷா நடிக்கவில்லை. அவர் ஒரு மாறுபட்ட கதையின் கருவான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரைச்சுற்றித்தான் கதை பின்னப்பட்டுள்ளது. இதில் கதைப்படி, அரவிந்த்சாமிக்கு ஜோடியாக பூர்ணா நடிப்பது தற்போது தெரிய வந்துள்ளது. அந்த வகையில், அவர்களுக்கிடையே ரொமான்ஸ் காட்சிகளும் உள்ளதாம். இந்த படத்தில் அரவிந்த்சாமியுடன் தான் நடித்திருப்பதால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் பூர்ணா.
காரணம், அவர் பள்ளியில் படித்து வந்த காலத்தில் இருந்தே அரவிந்த்சாமியின் ரசிகையாம். அதனால் அவர் நடித்த படங்களை விரும்பிப்பார்த்து வந்தவருக்கு அவரை ஒருமுறையேனும் நேரில் காண வேண்டும் என்கிற ஆசையும் மனதளவில் இருந்து வந்ததாம். ஆனால் இப்போது, இந்த படத்தில் அவருக்கு ஜோடியாகவே நடிக்கும் வாய்ப்பு கிடைத்துவிட்டதால் சொல்ல முடியாமல் சந்தோசத்தில் திக்கு முக்காடிப்போயிருக்கிறாராம் பூர்ணா.