ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபல மலையாள பாடகி மற்றும் இசை கலைஞர் வைக்கம் விஜயலட்சுமி. பார்வையற்ற இந்த இசை கலைஞர் மலையாள இசை மற்றும் திரையுலகின் செல்லப்பிள்ளை. காயத்ரி வீணை என்ற இசை கருவியையும் இசைக்கத் தெரிந்தவர். இவர் பாடிய மலையாள பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. தமிழில் வெள்ளக்காரதுரை, குக்கூ, படங்களில் பாடியுள்ளார். வீரசிவாஜி படத்தில் இவர் பாடிய "சொப்பன சுந்தரி..." பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பிக் கொண்டிருக்கிறது.
விஜயலட்சுமிக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்த பெற்றோர் அவருக்கு மணமகன் கேட்டு பத்திரிக்கையில் விளம்பரம் செய்திருந்தனர். இதை பார்த்த பல இளைஞர்கள் விஜலட்சுமியை திருமணம் செய்து கொள்ள முன்வந்தனர். அவர்களில் திருச்சூரைச் சேர்ந்த இசைக் கலைஞர் சந்தோஷ் என்பவரை விஜயலட்சுமி குடும்பத்தார் தேர்வு செய்தனர். இவருவரின் திருமண நிச்சயதார்த்தம் நேற்று நடந்தது. வருகிற மார்ச் மாதம் 29ந் தேதி திருமணம் நடக்கிறது.