பாலிவுட்டுக்கு போன வேகத்திலேயே காதல் கிசுகிசுவில் சிக்கிய ஸ்ரீ லீலா! | ரேஸில் விபத்தில் சிக்கிய அஜித் கார்! | வெற்றிமாறன் தயாரித்த ‛பேட் கேர்ள்' படத்தின் டீசரை நீக்க உயர் நீதிமன்றம் உத்தரவு | 43வது பிறந்தநாளில் பிரியங்கா சோப்ரா வெளியிட்ட பிகினி புகைப்படம்! | ‛இளைய தளபதி' பட்டத்துக்கு சொந்தக்காரன் நான்தான்! நடிகர் சரவணன் பரபரப்பு தகவல் | வீட்டுக்குள் புகுந்த பாம்பை தானே பிடித்த நடிகர் சோனு சூட்! | தனுஷ் பிறந்த நாளில் தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகும் ‛மயக்கம் என்ன' | பேண்டஸி காதல் ஜானரில் உருவாகும் கவின் 9வது படம்! | ‛கில்லர்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | மீண்டும் ஹீரோவாக ஆக்சன் கிங் அர்ஜுன்! |
சென்னையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் பத்திரிகையாளர் சோ ஆகியோருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் கலந்த கொண்ட ரஜினி பேசியதாவது:
ஆணாதிக்கம்மிகுந்த சமுதாயத்தில் தன்னுடைய முயற்சியால் முன்னுக்கு வந்தவர். பொதுவாழ்க்கையில் அவர் வைரம் போன்றவர் 1996-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நான் பேசிய பேச்சால் ஜெயலலிதா மனது துன்பட்டது. போராட்டங்களையே வாழ்க்கையாக கொண்டவர் ஜெயலலிதா. பொது வாழ்க்கைக்காக தமது சொந்த வாழ்க்கையை தியாகம் செய்தவர். ஜெயலலிதாவும் சோவும் நெருங்கிய நண்பர்களாக திகந்தனர்.ஜெயலலிதா என்ற பெரிய ஆத்மா மகாத்மா ஆகி விட்டது. சோதனைகளை சாதனைகளாக ஆக்கி காட்டியவர் , துணிச்சல் எதிர்நீச்சல் போன்றவற்றை ஜெயலலிதாவிடம் கற்க வேண்டும். என ரஜினி பேசினார்.