பாலிவுட்டுக்கு போன வேகத்திலேயே காதல் கிசுகிசுவில் சிக்கிய ஸ்ரீ லீலா! | ரேஸில் விபத்தில் சிக்கிய அஜித் கார்! | வெற்றிமாறன் தயாரித்த ‛பேட் கேர்ள்' படத்தின் டீசரை நீக்க உயர் நீதிமன்றம் உத்தரவு | 43வது பிறந்தநாளில் பிரியங்கா சோப்ரா வெளியிட்ட பிகினி புகைப்படம்! | ‛இளைய தளபதி' பட்டத்துக்கு சொந்தக்காரன் நான்தான்! நடிகர் சரவணன் பரபரப்பு தகவல் | வீட்டுக்குள் புகுந்த பாம்பை தானே பிடித்த நடிகர் சோனு சூட்! | தனுஷ் பிறந்த நாளில் தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகும் ‛மயக்கம் என்ன' | பேண்டஸி காதல் ஜானரில் உருவாகும் கவின் 9வது படம்! | ‛கில்லர்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | மீண்டும் ஹீரோவாக ஆக்சன் கிங் அர்ஜுன்! |
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக திடீர் மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு திரையுலக முன்னணி நடிகர், நடிகைள் திரண்டு சென்று நேரில் அஞ்சலி செலுத்தினர். என்றாலும் பலர் வெளியூர் படப்பிடிப்பில் இருந்ததாலும், வெளிநாட்டில் இருந்ததாலும் கலந்து கொள்ள முடியவில்லை. இதையொட்டி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் இன்று மாலை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நினைவஞ்சலி கூட்டம் நடந்தது. இதில் நடிகர், நடிகைகள் மற்றும் திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டு ஜெயலலிதாவுக்கு நினைவஞ்சலி செலுத்தினார்கள்.
முதலில், ஜெயலலிதா படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில், நாசர், விஷால், பொன்வண்ணன், வடிவேலு, நந்தா, குட்டி பத்மினி, சச்சு, நடிகை சங்கீதா, ஜெயமாலினி, கார்த்திக், ராஜேஷ், ஆர்.வி. உதயகுமார், ரோகிணி, ஜீவா, பசுபதி, சிவக்குமார், மோகன், சங்கீதா, லதா, கார்த்தி, அம்பிகா, ராதா ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடிகர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
முன்னதாக, தென்னிந்திய நடிகர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நடிகர் சங்கத்தின் மரகத மணியாக திகழந்த அம்மா என்று மக்கள் தங்கள் மனதில் வைத்து பூஜிக்கும் பேரன்புக்கும் மரியாதைக்கும் உரிய கலையுலக சகோதரி செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் நம்மை மீளா துயரில் நம்மை தவிக்கவிட்டு சென்று இருக்கிறார். அன்னாருடைய ஆத்மா சாந்தி அடையவும் , அவர்தன் நினைவுகளை பகிர்ந்து கொள்ளவும் பெருமைகளை பதிவுசெய்யவும் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் நினைவு அஞ்சலி நிகழ்வு ஒன்று நடைபெறவுள்ளது. கலைக்காகவும் , பொது பணிக்காகவும் தம் வாழ்வை அர்பணித்த அவ்வாத்மாவிற்கு அஞ்சலி செலுத்த நடிகர் சங்க உறுப்பினர்கள் , உறுப்பினர் அல்லாத நடிகர்கள் , திரையுலக ஜாம்பாவான்கள் என அனைவரும் கலந்துகொள்கிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.