பாலிவுட்டுக்கு போன வேகத்திலேயே காதல் கிசுகிசுவில் சிக்கிய ஸ்ரீ லீலா! | ரேஸில் விபத்தில் சிக்கிய அஜித் கார்! | வெற்றிமாறன் தயாரித்த ‛பேட் கேர்ள்' படத்தின் டீசரை நீக்க உயர் நீதிமன்றம் உத்தரவு | 43வது பிறந்தநாளில் பிரியங்கா சோப்ரா வெளியிட்ட பிகினி புகைப்படம்! | ‛இளைய தளபதி' பட்டத்துக்கு சொந்தக்காரன் நான்தான்! நடிகர் சரவணன் பரபரப்பு தகவல் | வீட்டுக்குள் புகுந்த பாம்பை தானே பிடித்த நடிகர் சோனு சூட்! | தனுஷ் பிறந்த நாளில் தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகும் ‛மயக்கம் என்ன' | பேண்டஸி காதல் ஜானரில் உருவாகும் கவின் 9வது படம்! | ‛கில்லர்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | மீண்டும் ஹீரோவாக ஆக்சன் கிங் அர்ஜுன்! |
தமிழ் சினிமாவின் முக்கிய நாயகிகளில் ஒருவர் நடிகையர் திலகம் சாவித்ரி. முதன் முதலில் விலை உயர்ந்த கார் வாங்கியவர், பங்களா கட்டியவர், அதிக சம்பளம் வாங்கியவர். தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்தவர் அவர்தான். முதன் முறையாக சொத்துக்கள் அனைத்தையும் இழந்து, போதை பழக்கத்துக்கு அடிமையாக கொடூரமாக மரணம் அடைந்தவரும் அவர்தான். அவரது வாழ்க்கையை தற்போது நாக் அஸ்வின் என்ற தெலுங்கு இயக்குனர் படமாக தயாரித்து இயக்குகிறார்.
படத்தின் திரைக்கதையை எழுதி முடித்து சாவித்ரி குடும்பத்தினரிடம் அனுமதியும் பெற்று விட்டார். ஆனால் சாவித்ரியாக நடிக்க தென்னிந்திய மொழிகளுக்கு அறிமுகமான முன்னணி நடிகையை தேடினார். அனுஷ்கா, வித்யாபாலன், நயன்தரா, காஜல் அகர்வால் நித்யாமேனன் என பல நடிகைகளை அணுகினார். சாவித்ரி கேரக்டரில் நடிக்க ஆர்வமாக வந்தவர்கள். கதையை கேட்டவுடன் நடிக்க தயங்கியதாக கூறப்படுகிறது. கடைசியாக நித்யா மேனன் ஓகே சொல்லி சாவித்ரியின் பழைய படங்களை பார்க்க ஆரம்பித்தார். ஆனாலும் அவர் கடைசி நேரத்தில் விலகிக் கொண்டார்.