பாலிவுட்டுக்கு போன வேகத்திலேயே காதல் கிசுகிசுவில் சிக்கிய ஸ்ரீ லீலா! | ரேஸில் விபத்தில் சிக்கிய அஜித் கார்! | வெற்றிமாறன் தயாரித்த ‛பேட் கேர்ள்' படத்தின் டீசரை நீக்க உயர் நீதிமன்றம் உத்தரவு | 43வது பிறந்தநாளில் பிரியங்கா சோப்ரா வெளியிட்ட பிகினி புகைப்படம்! | ‛இளைய தளபதி' பட்டத்துக்கு சொந்தக்காரன் நான்தான்! நடிகர் சரவணன் பரபரப்பு தகவல் | வீட்டுக்குள் புகுந்த பாம்பை தானே பிடித்த நடிகர் சோனு சூட்! | தனுஷ் பிறந்த நாளில் தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகும் ‛மயக்கம் என்ன' | பேண்டஸி காதல் ஜானரில் உருவாகும் கவின் 9வது படம்! | ‛கில்லர்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | மீண்டும் ஹீரோவாக ஆக்சன் கிங் அர்ஜுன்! |
தனி ஒருவன் வெற்றிக்கு பிறகு போகன் படத்தில் நடித்து முடித்து விட்ட ஜெயம்ரவி தற்போது ஏ.எல்.விஜய் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக இந்தி நடிகை சாயாஷா சைகல் நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். திரு ஒளிப்பதிவு செய்கிறார். திங் பிக் ஸ்டூடியோ சார்பில் ஏ.எல்.விஜய்யின் தந்தை ஏ.எல்.அழகப்பன் தயாரிக்கிறார்.
இதன் படப்பிடிப்புகள் மும்முரமாக நடந்து வருகிறது. படத்திற்கு முதலில் குமரிகாண்டம் என்று பெயர் வைத்திருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் அதனை முறைப்படி அறிவிக்கவில்லை. தற்போது வனமகன் என்ற பெயர் வைக்கப்பட்டிருப்பதாக ஜெயம்ரவி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதோடு படத்தின் டைட்டில் டிசைனையும் வெளியிட்டிருக்கிறார். வனமகன் என்றால் காட்டின் மைந்தன், அல்லது மலையின் மைந்தன் என்று பொருள். பச்சை நிற பின்னணியில் வனமகன் டைட்டில் வைக்கப்பட்டுள்ளதால். இது மலைவாழ் மக்கள் சார்ந்த கதை அல்லது மலையில் நடக்கும் எதை என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.