பாலிவுட்டுக்கு போன வேகத்திலேயே காதல் கிசுகிசுவில் சிக்கிய ஸ்ரீ லீலா! | ரேஸில் விபத்தில் சிக்கிய அஜித் கார்! | வெற்றிமாறன் தயாரித்த ‛பேட் கேர்ள்' படத்தின் டீசரை நீக்க உயர் நீதிமன்றம் உத்தரவு | 43வது பிறந்தநாளில் பிரியங்கா சோப்ரா வெளியிட்ட பிகினி புகைப்படம்! | ‛இளைய தளபதி' பட்டத்துக்கு சொந்தக்காரன் நான்தான்! நடிகர் சரவணன் பரபரப்பு தகவல் | வீட்டுக்குள் புகுந்த பாம்பை தானே பிடித்த நடிகர் சோனு சூட்! | தனுஷ் பிறந்த நாளில் தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகும் ‛மயக்கம் என்ன' | பேண்டஸி காதல் ஜானரில் உருவாகும் கவின் 9வது படம்! | ‛கில்லர்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | மீண்டும் ஹீரோவாக ஆக்சன் கிங் அர்ஜுன்! |
புரூஸ் லீ, ஜெட் லீ, ஷாக்கிசான் வரிசையில் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான சீன நடிகர் டோனி ஜா. அவர் நடித்த ஓங் படத்தின் 3 பாகங்களும் தமிழ்நாட்டில் தமிழில் வெளியாகி வசூலை குவித்திருக்கிறது. டோனி ஜா இப்போது ஹாலிவுட்டிலும் கால் பதித்திருக்கிறார். அவர் நடிக்கும் முதல் ஹாலிவுட் படம் ஸ்கின் டிரேட்.
அவருடன் ஹாலிவுட் நடிகர் டோல்ப் லன்ங்கரன் நடிக்கிறார். தயாரிப்பாளரும் அவர்தான். இவர்கள் தவிர மைக்கேல் ஜெய் ஒயிட், ரான் பர்ல்மென், பீட்டர் வெல்லர் ஆகியோரும் நடிக்கிறார்கள். பியூட்டிபுல் பாக்சர், பிளஸ்சர் பேக்டரி போன்ற படங்களை இயக்கிய யக்காச்சி உக்ரோந்தன் என்ற சீன இயக்குனர் இயக்கியுள்ளார். ஆங்கிலம், சீனம், தாய், செர்பியன் மொழியில் தயாரான இந்தப் படம் கடந்த மாதம் 7ந் தேதி வெளிநாடுகளில் வெளியாகி மிகப்பெரிய வசூலை அள்ளியது.