பாலிவுட்டுக்கு போன வேகத்திலேயே காதல் கிசுகிசுவில் சிக்கிய ஸ்ரீ லீலா! | ரேஸில் விபத்தில் சிக்கிய அஜித் கார்! | வெற்றிமாறன் தயாரித்த ‛பேட் கேர்ள்' படத்தின் டீசரை நீக்க உயர் நீதிமன்றம் உத்தரவு | 43வது பிறந்தநாளில் பிரியங்கா சோப்ரா வெளியிட்ட பிகினி புகைப்படம்! | ‛இளைய தளபதி' பட்டத்துக்கு சொந்தக்காரன் நான்தான்! நடிகர் சரவணன் பரபரப்பு தகவல் | வீட்டுக்குள் புகுந்த பாம்பை தானே பிடித்த நடிகர் சோனு சூட்! | தனுஷ் பிறந்த நாளில் தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகும் ‛மயக்கம் என்ன' | பேண்டஸி காதல் ஜானரில் உருவாகும் கவின் 9வது படம்! | ‛கில்லர்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | மீண்டும் ஹீரோவாக ஆக்சன் கிங் அர்ஜுன்! |
மகாகவி பாரதியாரின் 124 வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நடிகர் கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பாரதியாருக்கு புகழஞ்சலி செலுத்தி உள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன், மாடிப்படியில் தவறி விழுந்த நடிகர் கமல், சிகிச்சைக்கு பிறகு ஓய்வில் இருந்து வந்தார். சுமார் 2 மாத ஓய்விற்கு பிறகு, தற்போது மீண்டும், தனது அடுத்த படமான சபாஷ் நாயுடு படத்தில் கமல் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருடன், அவர் மகள் ஸ்ருதிஹாசனும் நடித்து வருகிறார். சபாஷ் நாயுடு படத்திற்காக தற்போது அமெரிக்காவில் சூட்டிங்கில் இருந்து வருகிறார் கமலஹாசன். இந்நிலையில் மகாகவி பாரதியாரின் பிறந்தநாளை முன்னிட்டு கமல், டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.
டுவிட்டரில் கமல் பதிவிட்டுள்ள கருத்தில், " எத்தனை பேரை எழுதவைத்தான் நம் பாரதி! அத்தனை கோடி நன்றி அவ்வாசானுக்கு. முன்னோர் தமிழை என்வரை கொண்டு சேர்த்தமைக்காகவும் கூட." என குறிப்பிட்டுள்ளார்.