பாலிவுட்டுக்கு போன வேகத்திலேயே காதல் கிசுகிசுவில் சிக்கிய ஸ்ரீ லீலா! | ரேஸில் விபத்தில் சிக்கிய அஜித் கார்! | வெற்றிமாறன் தயாரித்த ‛பேட் கேர்ள்' படத்தின் டீசரை நீக்க உயர் நீதிமன்றம் உத்தரவு | 43வது பிறந்தநாளில் பிரியங்கா சோப்ரா வெளியிட்ட பிகினி புகைப்படம்! | ‛இளைய தளபதி' பட்டத்துக்கு சொந்தக்காரன் நான்தான்! நடிகர் சரவணன் பரபரப்பு தகவல் | வீட்டுக்குள் புகுந்த பாம்பை தானே பிடித்த நடிகர் சோனு சூட்! | தனுஷ் பிறந்த நாளில் தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகும் ‛மயக்கம் என்ன' | பேண்டஸி காதல் ஜானரில் உருவாகும் கவின் 9வது படம்! | ‛கில்லர்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | மீண்டும் ஹீரோவாக ஆக்சன் கிங் அர்ஜுன்! |
இது தமிழ் சினிமாவின் நூற்றாண்டு. தமிழ்நாட்டில் தயாரான முதல் சலனப் படம் கீசக வதம். தஞ்சாவூரைச் சேர்ந்த மூப்பனார் என்பவர் வெளிநாடு சென்று விட்டு வரும்போது ஒரு சினிமா கேமராவை வாங்கி வந்தார். அதனை அவருக்கு இயக்கத் தெரியவில்லை. அதனால் சென்னையில் கார் கம்பெனி நடத்தி வந்த ஆர்.நடராஜ முதலியாரிடம் கேமராவை கொடுத்து விட்டு அதற்கு பதிலாக இரண்டு கார்களை வாங்கிக் கொண்டார்.
நடராஜ முதலியார் ஆர்வமாக வாங்கிக் கொண்டாலும் அவருக்கும் இயக்கத் தெரியவில்லை. இதனால் கேமராவை தன் கார் கம்பெனியில் காட்சி பொருளாக வைத்தார். அதை மக்கள் ஆர்வமாக பார்ப்பதை கண்ட முதலியார். சினிமா எடுத்தால் கார் கம்பெனியை விட அதிகம் சம்பாதிக்கலாம் என்று முடிவு செய்தார்.
மும்பை சென்று படம் எடுப்பதை கற்ற வந்த முதலியார் சுகுணவிலாஸ் நாடக கம்பெனியில் பெண்ணாக நடித்துக் கொண்டிருந்த ரங்கவடிவேலு என்பவரை ஹீரோயினாகவும், வேறு சில நடிகர்களையும் இணைத்து சினிமாவில் நடிப்பது எப்படி என்று பயிற்சி கொடுத்தார். தனது பங்களா வீட்டையே ஸ்டூடியோவாக்கினார். இந்தியா பிலிம் கம்பெனி என்ற நிறுவனத்தை தொடங்கி முதலில் எடுத்த சலனப்படம் கீசகவதம்.
35 நாளில் 35 ரூபாயில் எடுக்கப்பட்டது. மொத்த படமே ஆயிரம் அடிதான். இதன் பிறகு 5 படங்களை தயாரித்த நடராஜ முதலியார் நஷ்டம்தான் அடைந்தார். நாடகங்களின் ஆதிக்கத்துக்கு முன்னால் சலனபடங்கள் எனப்படம் மவுனப்படங்களுக்கு வரவேற்பில்லை. படத்தில் நடிக்க நடிகைகள் கிடைக்காமல் ஆங்கில பெண்மணியை திரபுவதையாக நடிக்க வைத்தார். ஆக தமிழ் சினிமாவின் முதல் தயாரிப்பாளரே சினிமாவால் சொத்துக்களை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. (அருகில் உள்ள படம்: நடராஜ முதலியார் தயாரித்த சலனப் படம் ஒன்றின் காட்சி. படத்தில் இருக்கும் இருவரும் ஆண்களே)