'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
அப்பா படத்திற்கு பிறகு சமுத்திரகனி இயக்கி, நடிக்கும் படம் தொண்டன். அவர் இயக்கும் முழுநீள அரசியல் படம். இன்றைய சூழ்நிலையில் ஒரு கட்சியின் அடிமட்ட தொண்டனின் நிலை என்ன என்பதை சொல்கிற படம். சமுத்திரகனியுடன் விக்ராந்த், நமோ நாராயணன், தம்பி ராமய்யா, சூரி, கஞ்சா கருப்பு, மூர்த்தி உள்பட பலர் நடிக்கிறார்கள். சமுத்திரகனிக்கும், விதார்த்துக்கும் ஜோடி இருக்கிறது. அவர்கள் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. சமுத்திரகனி ஜோடியாக ரம்யா பாண்டியன் நடிக்கலாம் என்று தெரிகிறது.
ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவு செய்கிறார், ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைக்கிறார். பாடல்களை யுகபாரதியும், விவேக்கும் எழுதுகிறார்கள். அச்சம் என்பது மடமையடா, கிடாரி, உள்ளிட்ட பல படங்களை விநியோகித்த வசுந்தராதேவி சினி பிலிம்ஸ் சார்பில் ஆர்.மணிகண்டன் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் வருகிற 16ந் தேதி நெய்வேலியில் தொடங்குகிறது. படத்தின் பூஜை சமுத்திரகனி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் படம் சம்பந்தப்பட்டவர்களுடன் சசிகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.