'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன் நடிப்பில் ஏஆர்.ரஹ்மான் இசையில் வெளிவந்த படம் ‛ஓ காதல் கண்மணி'. தமிழில் வெற்றிப்பெற்ற இப்படம், ஹிந்தியில் ‛ஓகே ஜானு' என்ற பெயரில் ரீ-மேக்காகி வருகிறது. ஆதித்யா ராய் கபூர், ஸ்ரத்தா கபூர் ஹீரோ, ஹீரோயின்களாக நடிக்க, ஷாத் அலி இயக்குகிறார். மணிரத்னமும், கரண் ஜோகரும் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில், அடுத்தப்படியாக படத்தின் டிரைலரை ரிலீஸ் செய்ய உள்ளனர். அதன்படி, வருகிற டிச., 12-ம் தேதி ஓகே ஜானு படத்தின் டிரைலர் வெளியிடப்பட இருப்பதாக தயாரிப்பாளர் கரண், தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். ஓகே ஜானு படம் அடுத்தாண்டு ஜன., 13-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.