ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
நடிகைகளைப் பொறுத்தவரை திருமணம் செய்து கொண்டால் அவர்களை ஓரங்கட்டி விடுவது சினிமா உலகில் நீணடகாலமாக நடந்து வருகிறது. ஆனால் சமீபகாலமாக அந்த நிலையை மாற்றும் முயற்சியில் பாலிவுட் நடிகைகள் முயற்சித்து வருகின்றனர். அந்த வகையில், ஐஸ்வர்யாராய், வித்யாபாலன் உள்ளிட்ட சில நடிகைகள திருமணத்திற்கு பிறகும் கதாநாயகிகளாகவே நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு டைரக்டர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்து கொண்டு பின்னர் விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ள நடிகை அமலாபாலும் தற்போது மீண்டும் கதாநாயகியாக சில படங்களில் நடித்து வருகிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில், நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொள்ளப்போகிறார் என்ற செய்தி வெளியானதும் அவரை படங்களுக்கு புக் பண்ண பேசி வந்தவர்கள் அப்படியே பின்வாங்கி விட்டார்களாம்.
இதுபற்றி சமந்தா கூறுகையில், நடிகைகளை திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு வெளியேற்றி விடுவது நீண்டகாலமாக நடந்து வருகிறது. அதில் ஒரு சிலர் மட்டும் தப்பித்து வருகிறார்கள். அந்த வகையில், நானும் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன். நடிகைகள் நடிப்பதற்கு திருமணம் ஒரு தடையாக இருக்கக்கூடாது. தொடர்ந்து வாய்ப்புக்கொடுக்க வேண்டும் என்பது எனது கருத்து. அதை நான் நடைமுறைப்படுத்திக்காட்டுவேன் என்கிறார்.