ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
டைரக்டர் கே.பாக்யராஜின் மகன் சாந்தனு, தயாரிப்பாளர் எஸ்.தாணுவின் மகன் கலா பிரபு இயக்கிய சக்கரகட்டி படத்தில் அறிமுகமானார். அதன்பிறகு தந்தை கே.பாக்யராஜின் சித்து பிளஸ்-2வில் நடித்தார். தொடர்ந்து கண்டேன், ஆயிரம் விளக்கு, அம்மாவின் கைப்பேசி என பல படங்களில் நடித்தவர் தற்போது முப்பரிமாணம், கோடிட்ட இடங்களை நிரப்புக ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், மீண்டும் தனது தந்தை கே.பாக்யராஜின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கப்போகிறார் சாந்தனு. இந்த படத்தை டைரக்டர் ஆர்.பார்த்திபன் தயாரிக்கிறார். இந்த படத்திற்கான அடவான்ஸை சமீபத்தில் கோடிட்ட இங்களை நிரப்புக படத்தின் ஆடியோ விழா நடந்த மேடையிலேயே பாக்யராஜிடம் வழங்கினார் பார்த்திபன்.
அப்போது கே.பாக்யராஜ் பேசுகையில், விஜய் பல படங்களில் நடித்த பிறகுதான் வெற்றி பெற்றார். அதேபோல் சீயான் விக்ரமும் பல வருடங்களாக போராடிக்கொண்டிருந்தார். அதன்பிறகுதான் வெற்றியை எட்டினார். அதேபோல் இப்போது சாந்தனுவும் ஒரு பிரேக்கிற்கான முயற்சியில் இருக்கிறார். ஆனால், கண்டிப்பாக விரைவில் அவரும் வெற்றி பெற்று விடுவார். சாந்தனுவிடம் திறமை இல்லை யென்றால்தான் ஜெயிப்பாரா? மாட்டாரா? என நான் பயப்பட வேண்டும். ஆனால் அவரிடம் நடிப்புத்திறமை உள்ளது. அதனால் சீக்கிரமே சாந்தனுவும் சினிமாவில் ஜெயித்து விடுவார் என்றார்.