ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ராஜேஷ்.எம் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்த கடவுள் இருக்கான் குமாரு படத்தில், ஜீ தமிழ் சேனலில் லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தி வரும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை கலாய்த்திருந்தார் ஆர்.ஜே.பாலாஜி. இதற்கு லட்சுமிராமகிருஷ்ணன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் ஒரு வாரகாலமாக இணையதளங்களில் பரவலாக பேசப்படும் நடிகராக திகழ்ந்தார் ஆர்.ஜே.பாலாஜி.
இந்த நிலையில், நடிகர் நாசரின் மகன் லுத்புதீன் நாயகனாக நடித்து நேற்று வெளியாகியுள்ள பறந்து செல்லவா படத்திலும் தனது கலாய்ப்பை தொடர்ந்திருக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி. ஆனால் இந்த படத்தில் லட்சுமி ராமகிருஷ்ணனை மாதிரி தனி நபர்களை குறிப்பிட்டு அவர் கலாய்க்கவில்லை. மாறாக, படங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர்கள் இணையதளங்களில் வெளியாகும்போது, சம்பந்தப்பட்டவர்களே அதற்கு லட்சக்கணக்கில் லைக்ஸ் கிடைத்தது போன்று பில்டப் கொடுப்பதாக தயாரிப்பாளர்களை கலாய்த்துள்ளார் ஆர்.ஜே.பாலாஜி. இதற்கு எந்த மாதிரியான எதிர்ப்புகள் எழப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.