படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

சூர்யா நடித்து வெற்றி பெற்ற சிங்கம் பட வரிசையில் இப்போது 3ம் பாகம் ரெடியாகி வருகிறது. தற்போது படப்பிடிப்புகள் முடிந்து இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது. முந்தைய இரண்டு பாகங்களில் நடித்த அனுஷ்காவுடன், ஸ்ருதிஹாசன், சூரி இந்தி வில்லன் தாகூர் அனுப் சிங் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார், ப்ரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் ஹரி கூறியதாவது: சிங்கம், சிங்கம் 2 வெற்றிக்கு பிறகு சிங்கம் 3 எடுக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தோம். சூர்யா சார் வேறு இரண்டு படங்கள் முடிக்கட்டும். நானும் வேறு ஹீரோக்களை வைத்து இரண்டு படம் முடித்து விட்டு வந்த பிறகு இருவரும் இணையலாம் என்பது தான் திட்டம். ஆனால் சமூக வலைத்தளங்களில் சிங்கம் 3க்கு போஸ்டர் டிசைனே வரைந்து தள்ளிவிட்டார்கள் ரசிகர்கள். அவர்களே இவ்வளவு ஆர்வமாக இருக்கும்போது நாம் ஏன் அதை தள்ளிப்போட வேண்டும் என்று யோசித்தோம். ஆனால் கதைதான் பிடிபடாமல் இருந்தது. திடீர்னு ஒரு நாள் பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு போலீசும், ஆந்திரா போலீசும் இணைந்து நடத்திய ஒரு ஆபரேஷன் பற்றி படிக்க நேர்ந்தது. ஒன்லைன் கிடைத்தது.
அப்புறம் அசிஸ்டெண்டுகளை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று ஸ்டோரி டிஷ்கசன் பண்ணி சிங்கம் 3யை உருவாக்கினோம். சிங்கம் ஒன்றில் உள்ளூர் பிரச்சினையை டீல் பண்ணினார் துரை சிங்கம், சிங்கம் 2 வில் அப்படியே கொஞ்சம் நகர்ந்து கடற்கரை பிரச்சினையை டீல் பண்ணினார். மூன்றில் கடலை தாண்டி டீல் பண்ணுகிறார். முதல் படத்தில் சுமோக்கள் பறந்தது, இரண்டாம் பாகத்தில் போட்டுகள், கப்பல்கள் பறந்தது. மூன்றாம் பாகத்தில் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் பறக்கிறது. திருநெல்வேலியில் ஆரம்பிக்கிற கதை ஆந்திரா, மலேசியா, ருமேனியா, ஜார்ஜியான்னு சுற்றி கடைசியல் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் முடிகிறது.
முதல் பாகத்திலிருந்து அனுஷ்கா சூர்யாவின் ஜோடி என்பதால் மாற்றமில்லை. ஒருவேளை அடுத்த பார்ட் எடுத்தால்கூட அதில் அனுஷ்கா இருப்பார் அது தவிர்க்க முடியாது. அவர் தவிர இன்னொரு ஹீரோயின் இருப்பார். இதில் ஸ்ருதிஹாசன், செம சேட்டையான பொண்ணாக வருகிறார். சூரியுடன் சேர்ந்து காமெடி பண்ணுகிறார். படத்தில் வில்லன் கேரக்டர் பவர்புல்லானது. தேடிப்பிடித்து இந்தி வில்லன் தாகூர் அனுப் சிங்கை பிடித்தோம். உலக ஆணழகன் பட்டம் வென்றவர், மார்ஷியல் ஆர்டஸ் கற்றவர். இப்போது தமிழ் கத்துக்கிட்டு படத்துக்கு தமிழ்லேயே டப்பிங்கும் பேசி இருக்கிறார்.
படம் தாமதம் என்று சிலர் நினைக்கிறார்கள் இல்லவே இல்லை. எனது படங்களில் அதிக நாள் எடுத்துக்கொண்ட படம்தான் இது ஆனால் நாங்கள் திட்டமிட்ட 125 நாட்களுக்குள் படத்தை முடித்து விட்டோம். எனக்கு சினிமாவில் தத்துவம் சொல்லத் தெரியாது. யதார்த்தமான படங்கள் எடுக்கத் தெரியாது. நான் மக்களை மகிழ்விக்கிற பக்கா கமர்ஷியல் இயக்குனர். என் படத்துக்கு வந்தால் இரண்டறை மணி நேரம் உலகத்தை மறந்து ரசிக்கணும் அனுதான் எனக்கு வேணும். இந்தப் படமும் அதைச் நிச்சயம் செய்யும். என்கிறார் ஹரி.