ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
கிடாரி படத்துக்கு பிறகு சசிகுமார் நடித்து வரும் படம் பலே வெள்ளையத்தேவா. அவருடன் கோவை சரளா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி தன்யா ஹீரோயினாக அறிமுகமாகிறார். ரோகினி சசிகுமார் அம்மாவாகவும், சங்கிலி முருகன் தாத்தாவாகவும் நடித்துள்ளார். தர்புகா சிவா இசை அமைத்துள்ளார், பி.சோலை பிரகாஷ் இயக்கி உள்ளார்.
மதுரைக்கார இளைஞனாகவே நடிக்கும் சசிகுமார் இதில் மதுரையில் குடியேறும் வெளியூர் இளைஞனாக நடிக்கிறார். குடும்ப சூழ்நிலை காரணமாக தாத்தா பாட்டியுடன் மதுரையில் குடியேறும் சசிகுமாருக்கு வந்த இடத்தில் தன்யாவுடன் காதலும், தாதாக்களுடன் மோதலும் ஏற்படுகிறது. அதை பாட்டி கோவை சரளா உதவியுடன் எப்படி சமாளிக்கிறார் என்கிற கதை. கிட்டத்தட்ட பாட்டி சொல்லை தட்டாதே மாதிரியான கதை என்கிறார்கள்.
இது ஒரு குறுகியகால தயாரிப்பாக எடுத்து முடிக்கப்பட்டு வருகிற கிறிஸ்துமஸ் (25ந் தேதி) அன்று வெளிவருகிறது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளரும், ஹீரோவுமான சசிகுமார் கூறியதாவது: படத்தின் ஸ்கிரிப்ட் பக்காவாக இருந்ததால் 50 நாளில் படத்தை முடித்து விட்டோம். தேனி, மதுரையில் படப்பிடிப்பு நடந்துள்ளது. தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகள் நடந்து வருகிறது. காமெடி, காதல், ஆக்ஷன் சம அளவில் கலந்து உருவாகி உள்ளது" என்கிறார் சசிகுமார்.