கவினுக்கு ஜோடியான பிரியங்கா மோகன் | தெலுங்கு படத்தில் விலைமாதுவாக நடிக்கும் கயாடு லோஹர் | பிரேமலு ஹீரோவின் புதிய படப்பிடிப்பை துவங்கி வைத்த பஹத் பாசில் | கூலி ரிலீஸ் தேதி கவுன்ட் டவுன் போஸ்டர் வெளியானது | “என் உயிருக்கு ஏதாவது ஆனால்...” : நடிகர் பாலாவின் 3-வது மனைவி மருத்துவமனையில் அனுமதி | அடுத்த ஆண்டு துவக்கத்தில் விக்ரமை இயக்கும் பிரேம்குமார் | நடிகை கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை பிறந்தது | 'குட் பேட் அக்லி' வெளியாகி மூன்று மாதங்கள் : இன்னும் வராத அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு | 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் ‛நோ' விமர்சனம் : விஷால் வேண்டுகோள் | ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன் |
பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்க, விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள 'பைரவா' படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவிருக்கிறது. விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இப்படத்தில், ஜெகபதி பாபு வில்லனாக நடிக்கிறார். 'அழகிய தமிழ் மகன்' படத்தை தொடர்ந்து விஜய்யும், பரதனும் இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் இது. பைரவா படத்தின் வெளியீட்டு தேதி நெருங்கிவிட்டதால் பைரவா படத்தின் இறுதிகட்ட வேலைகள் படு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் 'பைரவா' படத்தின் இசை வெளியீட்டுக்கு தயாரிப்பாளர்கள் தேதி குறித்து விட்டார்கள் என்று தகவல் அடிபடுகிறது. அதாவது வருகிற 17 ஆம் தேதி சனிக் கிழமையன்று 'பைரவா' படத்தின் பாடல்கள் வெளியாகவிருக்கிறது. ஆனால் இந்த தகவல் உண்மை இல்லை என்றும் 'பைரவா' ஆடியோ வெளியிட்டு தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் 'பைரவா' படக்குழுவினர் தெரிவித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
விஜய் படத்துக்கு முதன் முதலாக சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள படம் என்பதால் 'பைரவா' படப் பாடல்களை பெரிதும் எதிர்பார்க்கிறார்கள் விஜய் ரசிகர்கள்! இதனால் 'பைரவா'வின் பாடல்கள் வெளியீட்டு விழா எப்போது என்பதை அறிய விஜய் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். அதிகாரபூர்வமான அறிவிப்புக்கும் காத்திருக்கின்றனர்.