கவினுக்கு ஜோடியான பிரியங்கா மோகன் | தெலுங்கு படத்தில் விலைமாதுவாக நடிக்கும் கயாடு லோஹர் | பிரேமலு ஹீரோவின் புதிய படப்பிடிப்பை துவங்கி வைத்த பஹத் பாசில் | கூலி ரிலீஸ் தேதி கவுன்ட் டவுன் போஸ்டர் வெளியானது | “என் உயிருக்கு ஏதாவது ஆனால்...” : நடிகர் பாலாவின் 3-வது மனைவி மருத்துவமனையில் அனுமதி | அடுத்த ஆண்டு துவக்கத்தில் விக்ரமை இயக்கும் பிரேம்குமார் | நடிகை கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை பிறந்தது | 'குட் பேட் அக்லி' வெளியாகி மூன்று மாதங்கள் : இன்னும் வராத அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு | 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் ‛நோ' விமர்சனம் : விஷால் வேண்டுகோள் | ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன் |
பிரிக்க முடியாதது எது என்று கேட்டால் மலையாள நடிகைகளும் விவாகரத்தும் என இன்றைய ட்ரெண்டிற்கு ஏற்றமாதிரி பதில் சொல்லலம் என்கிற அளவுக்கு மலையாள நடிகைகள் திடீர் திடீரென தங்களது விவாகரத்தை அறிவிக்கிறார்கள்.. இன்னும் சிலர் தங்களது மறு திருமணத்தை அதிரடியாக நடத்துகிறார்கள்.. அப்படி கடந்த இரண்டு மாதங்களில் எடுத்துக்கொண்டால், நடிகை அமலாபால் தனது கணவர் ஏ.எல்.விஜய்யிடம் இருந்து விவாகரத்துக்கு விண்ணப்பித்ததும், ஏற்கனவே தங்களது துணைகளிடம் இருந்து விவாகரத்து பெற்றிருந்த திலீப்-காவ்யா மாதவன் இருவரும் திருமணம் செய்துகொண்டதும் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கின.
இப்போது இன்னொரு அதிர்ச்சிகரமான செய்தியாக மலையாள நடிகை மீரா ஜாஸ்மினும் இந்த விவாகரத்து பட்டியலில் இடம்பெற இருக்கிறார் என மலையாள திரையுலகில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. மீரா ஜாஸ்மின் திரும்பவும் நடிக்க வந்ததும், அது அவரது கணவர் அனில் ஜான் டைட்டஸுக்கு பிடிக்கவில்லை என்றும் அதனால் மனக்கசப்புடன் அவர்களது மண வாழ்க்கை நகர்கிறது என்றும் இதற்கு காரணம் என மலையாள சினிமா வட்டராத்தில் பேசிக்கொள்கிறார்களாம்.
ஆனால் சமீபத்தில் அமலாபால் விவாகரத்து கேட்டுள்ளார் என தெரியவந்ததும் மீரா ஜாஸ்மின் கூறியது என்ன தெரியுமா..? தானும் தனது கணவரும் மற்றவர்கள் நினைப்பது போல சாதாரண தம்பதி அல்ல என்றும், தான் படங்களில் மீண்டும் நடிக்க வந்ததே தனது கணவர் கொடுத்த ஊக்கத்தால் தான் என்றும் கூறியிருந்தார். அதுமட்டுமல்ல தம்பதிகள் இருவருக்குமான அடிப்படை உணர்வுகளை ஒருவருக்கொருவர் மதிக்கும்போது அங்கே பிரிவுக்கு வழியேது என்றும் கூறியிருந்தார் மீரா ஜாஸ்மின். அப்படியென்றால் இப்போது திடீரென இப்படி புகைவது ஏன் என் காரணம் தெரியாமல் விழிக்கிறார்கள் மீராவின் ரசிகர்கள்..