கவினுக்கு ஜோடியான பிரியங்கா மோகன் | தெலுங்கு படத்தில் விலைமாதுவாக நடிக்கும் கயாடு லோஹர் | பிரேமலு ஹீரோவின் புதிய படப்பிடிப்பை துவங்கி வைத்த பஹத் பாசில் | கூலி ரிலீஸ் தேதி கவுன்ட் டவுன் போஸ்டர் வெளியானது | “என் உயிருக்கு ஏதாவது ஆனால்...” : நடிகர் பாலாவின் 3-வது மனைவி மருத்துவமனையில் அனுமதி | அடுத்த ஆண்டு துவக்கத்தில் விக்ரமை இயக்கும் பிரேம்குமார் | நடிகை கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை பிறந்தது | 'குட் பேட் அக்லி' வெளியாகி மூன்று மாதங்கள் : இன்னும் வராத அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு | 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் ‛நோ' விமர்சனம் : விஷால் வேண்டுகோள் | ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன் |
2007-ம் வருடத்தில் இளம் நடிகர்களை வைத்து வெங்கட் பிரபு இயக்கிய படம் சென்னை 28. கிரிக்கெட்டை மையமாக வைத்து வெளிவந்த இப்படம் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி பெரும் வெற்றி பெற்றது. அதற்குப் பிறகுதான் குறும்படங்கள் மூலம் பட இயக்குனர்களாக அறிமுகமானவர்களுக்கும் வாசல்கள் திறந்தது. தற்போது, ‛சென்னை 600028 படத்தின் அடுத்தபாகத்தை, 9 வருடங்களுக்கு பிறகு கையிலெடுத்துள்ளார் வெங்கட்பிரபு. முந்தைய பாகத்தில் நடித்த ஜெய், அரவிந் ஆகாஷ், பிரேம்ஜி அமரன், மிர்ச்சி சிவா, விஜயலட்சுமி, நிதின் சத்யா, விஜய் வசந்த் உள்ளிட்டோர் இந்த பாகத்திலும் நடிக்கின்றனர். கூடுதலாக, மஹத், வைபவ் ஆகியோரும்இணைந்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் ரிலீஸ்க்கு தயாராகிவிட்டது. இரண்டுமுறை தள்ளிப்போய் நாளை(டிச.,11-ம் தேதி) ரிலீஸாக உள்ளது. தமிழகம் முழுக்க சுமார் 400 தியேட்டர்களில் வெளியாக உள்ளது. நாளை பறந்து செல்ல வா என்ற படம் மட்டும் தான் வெளிவர இருப்பதால் சென்னை 28_II படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.