கவினுக்கு ஜோடியான பிரியங்கா மோகன் | தெலுங்கு படத்தில் விலைமாதுவாக நடிக்கும் கயாடு லோஹர் | பிரேமலு ஹீரோவின் புதிய படப்பிடிப்பை துவங்கி வைத்த பஹத் பாசில் | கூலி ரிலீஸ் தேதி கவுன்ட் டவுன் போஸ்டர் வெளியானது | “என் உயிருக்கு ஏதாவது ஆனால்...” : நடிகர் பாலாவின் 3-வது மனைவி மருத்துவமனையில் அனுமதி | அடுத்த ஆண்டு துவக்கத்தில் விக்ரமை இயக்கும் பிரேம்குமார் | நடிகை கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை பிறந்தது | 'குட் பேட் அக்லி' வெளியாகி மூன்று மாதங்கள் : இன்னும் வராத அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு | 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் ‛நோ' விமர்சனம் : விஷால் வேண்டுகோள் | ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன் |
பாலிவுட்டின் பிரபல இயக்குநர்களில் மொஹித் சூரியும் ஒருவர். தற்போது இவர் ‛ஹாப் கேர்ள்பிரண்ட்' படத்தை இயக்கி வருகிறார். இதையடுத்து ‛ஆஷிக் 3' படத்தை இயக்க உள்ளார் மொஹித். ‛ஆஷிக் 3' படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா ஹீரோவாக நடிக்க உறுதியான நிலையில் ஆலியாபட் ஹீரோயினாக நடிக்கலாம் என தகவல் வெளியானது. இப்போது அதை உறுதிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் மொகித். இதுப்பற்றி சமீபத்தில் நடந்த ‛ஹாப் கேர்ள்பிரண்ட்' படத்தின் புரொமோஷனில் பங்கேற்ற மொஹித் ஆஷிக்-3 படம் பற்றி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது...... "ஆஷிக் படங்களின் வரிசையில் உருவாக இருக்கும் படம் ஆஷிக்-3. இப்படத்தில் ஆலியாபட் பாடகியாக நடிக்க இருக்கிறார். ஆஷிக்-3 படத்தின் கதையை ஆலியாவின் சகோதரி ஷாகீன் பட் எழுதி வருகிறார்" என்றார்.