கவினுக்கு ஜோடியான பிரியங்கா மோகன் | தெலுங்கு படத்தில் விலைமாதுவாக நடிக்கும் கயாடு லோஹர் | பிரேமலு ஹீரோவின் புதிய படப்பிடிப்பை துவங்கி வைத்த பஹத் பாசில் | கூலி ரிலீஸ் தேதி கவுன்ட் டவுன் போஸ்டர் வெளியானது | “என் உயிருக்கு ஏதாவது ஆனால்...” : நடிகர் பாலாவின் 3-வது மனைவி மருத்துவமனையில் அனுமதி | அடுத்த ஆண்டு துவக்கத்தில் விக்ரமை இயக்கும் பிரேம்குமார் | நடிகை கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை பிறந்தது | 'குட் பேட் அக்லி' வெளியாகி மூன்று மாதங்கள் : இன்னும் வராத அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு | 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் ‛நோ' விமர்சனம் : விஷால் வேண்டுகோள் | ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன் |
ஒரு நாள் கூத்து படத்தில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். தற்போது ஜெயம் ரவியுடன் டிக் டிக் டிக், உதயநிதி ஸ்டாலினுடன் பொதுவாக எம் மனசு தங்கம் படத்தில் நடித்து வருகிறார். மதுரை பெண்ணாக இருந்தாலும் துபாயில் பிறந்து வளர்ந்தவர். மாடல், பிட்னஸ் பயிற்சியாளர், கிக் பாக்சர், ரெஸ்ட்லிங் அனைத்தும் கற்றவர். சினிமா ஆசையில் எல்லாவற்றையும் தூக்கி போட்டுவிட்டு நடிக்க வந்து விட்டார்.
நிவேதாவின் இன்னொரு முகம் நல்ல ஓவியர். இந்த ஓவியத்தோடு ஒரு அபூர்வ சக்தியும் அவருக்கு இருக்கிறது. அவரது கனவில் நடக்கும் சில விஷயங்களை படமாக வரைந்து வைப்பாராம். அந்த நிகழ்ச்சி 6 மாதத்துக்குள்ளோ ஒரு வருடத்துக்குள்ளோ நடந்து விடுமாம். சுனாமி வருதற்கு ஒரு வருடம் முன்பே கனவு கண்டு வரைந்து வைத்திருந்தாராம். தற்போதும் இதுபோல நிறைய கனவுகள் கண்டு அதனை படமாக வைத்து வைத்திருக்கிறாராம். ஒரு வேளை கனவு கண்டது நிஜத்தில் நடக்காவிட்டாலும் சினிமாவில் காட்சியாகவாவது பார்த்து விடுவாராம். கனவுகள் பெரும்பாலும் இயற்கையோடு தொடர்புடையதாகத்தான் இருக்குமாம். இந்த அனுபவங்களை புத்தகமாக எழுதி வருகிறார் நிவேதா பெத்துராஜ்.