கவினுக்கு ஜோடியான பிரியங்கா மோகன் | தெலுங்கு படத்தில் விலைமாதுவாக நடிக்கும் கயாடு லோஹர் | பிரேமலு ஹீரோவின் புதிய படப்பிடிப்பை துவங்கி வைத்த பஹத் பாசில் | கூலி ரிலீஸ் தேதி கவுன்ட் டவுன் போஸ்டர் வெளியானது | “என் உயிருக்கு ஏதாவது ஆனால்...” : நடிகர் பாலாவின் 3-வது மனைவி மருத்துவமனையில் அனுமதி | அடுத்த ஆண்டு துவக்கத்தில் விக்ரமை இயக்கும் பிரேம்குமார் | நடிகை கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை பிறந்தது | 'குட் பேட் அக்லி' வெளியாகி மூன்று மாதங்கள் : இன்னும் வராத அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு | 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் ‛நோ' விமர்சனம் : விஷால் வேண்டுகோள் | ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன் |
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு பாடலாசிரியர் அஸ்மின் மற்றும் இசையமைப்பாளர் வர்சன் ஆகியோர் உருக்கமான பாடல் ஒன்றை இசை அஞ்சலியாக செலுத்தியுள்ளனர். தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த செப்., 22-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் திடீரென அவருக்கு ‛கார்டியாக் அரெஸ்ட்' ஏற்பட டிச., 5-ம் தேதி இரவு 11.30 மணியளவில் மரணம் அடைந்தார். அவரின் மறைவு தமிழகம் முழுக்க சோக அலையை ஏற்படுத்தியது. தமிழக தலைவர்கள் முதல் தேசிய தலைவர்கள் வரை பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். இளையராஜா, ரஜினி உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், ஜெயலலிதாவின் மறைவுக்கு பாடலாசிரியர் அஸ்மின் மற்றும் இசையமைப்பாளர் வர்சன் ஆகியோர் உருக்கமான இசை அஞ்சலி ஒன்றை செலுத்தியுள்ளார். "வானே இடிந்ததம்மா, வாழ்வே முடிந்ததம்மா... தாயே எழும்பிடம்மா, தமிழக நாடே அழுகுதம்மா..." என்று ஆரம்பிக்கும் இந்தப்பாடல், அம்மா இல்லாமல் நாடே கலங்குதம்மா என்று உணர்த்தியுள்ளார். தற்போது இந்தப்பாடல் இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பாடலை கேட்டு பலரும் உருகி போய் உள்ளனர். அந்தளவுக்கு மிகவும் உருக்கமாக, கேட்பவர்களை கண்கலங்கும் வைக்கும்படி பாடியிருக்கிறார் இசையமைப்பாளர் வர்சன்.
இயக்குனர் எஸ்பி ஜனநாதனின் புறம்போக்கு திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான வர்சன் இந்தப்பாடலுக்கு இசையமைத்துள்ளார். பாடலாசிரியர் அஸ்மின் பாடல் வரிகளை எழுதியுள்ளார்.
இதுப்பற்றி அஸ்மின் கூறியிருப்பதாவது... ‛‛நான் எழுதிய இந்தப்பாடல் மறைந்த புரட்சி தலைவி ஜெயலலிதா அம்மா அவர்களுக்கு சமர்ப்பணம். அம்மாவுக்கு சமர்ப்பணம் செய்து தமிழ் சினிமா கலைஞர்களால் (06.12.16)அன்று வெளியிடப்பட்ட முதல் இரங்கல் பாடல் இது. கேட்பவர்களை உருகவைக்கும் இந்தப்பாடலை பிடித்திருந்தால் நண்பர்களுக்கு பகிருங்கள்'' என்று கூறியுள்ளார் அஸ்மின்.
முன்னதாக இந்தப்பாடல் இசைஞானி இளையராஜா பாடி வெளியிட்டதாக தகவல் வந்தது. காரணம் அந்தப்பாட்டில் ஒலிக்கும் குரல், அப்படியே இளையராஜாவை பிரதிபலிப்பது போன்று இருந்தது. ஆனால் அது இசையமைப்பாளர் வர்சனின் குரலாகும்.