'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தொடர்ச்சியாக வெற்றிகளை ருசித்து வந்த விக்ரம் பிரபு, இது என்ன மாயம்,வெள்ளைக்கார துரை, வாகா ஆகிய படங்கள் தோல்வியை தழுவியதால்,கலக்கமடைந்து உள்ளார். இதனால், அவர், அடுத்து நடித்து வரும், வீர சிவாஜி படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டது. தொடர்ச்சியாக,பெரிய நடிகர்கள் மற்றும் பெரிய பட்ஜெட் படங்கள் வெளியானதால், வீரசிவாஜியை வெளியிடுவதில், படக்குழு தாமதித்து வந்தது. இந்நிலையில், வரும், 16ல், பெரிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாததால், வீர சிவாஜியை களத்தில் இறக்க முடிவு செய்துள்ளனர்.இந்த படத்தில், ஷாலினியின் தங்கை ஷாமிலியுடன் ஜோடி சேர்ந்துள்ளார் விக்ரம் பிரபு. இந்த ஜோடி பொருத்தமாவது வெற்றியை பெற்றுத் தருமா என, எதிர்பார்த்து காத்திருக்கிறார், அவர்.