பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராக இருப்பவர் விஷால். நடிகர் சங்கத்தின் பொதுக்குழு, கடந்த மாதம் 27ம் தேதி பலத்த சர்ச்சைகளுக்கிடையே நடிகர் சங்க வளாகத்திலேயே நடந்து முடிந்தது. அப்போது ஏற்பட்ட சிறு சிறு கைகலப்புகள், கார் கண்ணாடி உடைப்புகள் விவகாரத்தை இன்னும் சிக்கலாக்கின. அதன் பின் நடிகர் சங்கம் தொடர்பான எந்த ஒரு நிகழ்வும் பெரிய அளவில் நடக்கவில்லை. கொஞ்சம் அமைதியாகவே இருந்து வந்தது.
இந்நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று அஞ்சலி செலுத்த நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் தனியாகவே வந்தார். நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி ஆகியோருடன் அவர் சேர்ந்து வரவில்லை. சோவிற்கு அஞ்சலி செலுத்திய போதும் கூட விஷால் தனியாகவே வந்தார், நடிகர் சங்க நிர்வாகிகள் தனியாக வந்தனர். நடிகர் சங்கம் சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் முக்கிய நிகழ்வுகளில் பங்கெடுக்கச் சென்றால் கூட்டாகவே செல்வார்கள். ஆனால், கடந்த இரண்டு நாட்களாக விஷால் தனியாக வந்திருப்பது பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. குறிப்பாக நடிகர் சங்கத்திற்கும், விஷாலுக்கும் பிரச்னை போன்ற தகவல் பரவி வருகிறது. ஆனால் இதை விஷால் தரப்பு மறுத்துள்ளது.
இதுப்பற்றி விஷால் தரப்பு கூறியிருப்பதாவது... ‛‛கடந்த சில நாட்களாகவே விஷாலுக்கு கடுமையான காய்ச்சலாம், இதன்காரணமாக அவர் மருந்து மாத்திரைகள் எடுத்து கொள்வதால் நன்றாக ஓய்வு எடுத்து வருகிறாராம். அதனால் தான், நடிகர் சங்கம் நிர்வாககிள் உடன் அவர் செல்லாமல் தனியாக சென்று அஞ்சலி செலுத்தியதாகவும், மற்றபடி எந்த பிரச்னையும் இல்லை என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.