'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
ஷங்கர் இயக்கும் படம் பற்றிய தகவலோ, புகைப்படங்களோ அதிகாரபூர்வமாக வெளியாகும்வரை மீடியாக்களுக்கு வழங்கப்படமாட்டாது. இந்த வழக்கத்துக்கு மாறாக, '2.0' படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பலமுறை வெளியாகிவிட்டன. டில்லி நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது செல்போனில் எடுக்கப்பட்ட அக்ஷய்குமாரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. அதில் அக்ஷய்குமாரின் தோற்றம் மிரட்டும் வகையில் இருந்தது.
சமீபத்தில் வெளியிடப்பட்ட '2.0' ஃபர்ஸ்ட் போஸ்டரிலும் அந்த தோற்றத்திலேயே காட்சியளித்தார் அக்ஷய்குமார். ரஜினிக்கு வில்லனாக அக்ஷய் நடிக்கிறார் என்று ஆரம்பத்தில் சொல்லப்பட்டது. அதோடு, அவருடைய கேரக்டர் எப்படிப்பட்டது என்பது இத்தனை நாள் ரகசியமாகவே இருந்தது. அக்ஷய் வில்லன் இல்லை, மற்றொரு ஹீரோ என்ற தகவல் ரஜினி வாயாலேயே வெளியானது.
இந்நிலையில், தற்போது அதுகுறித்த தகவல்வெளியாகி உள்ளது. அதாவது, சயின்டிஸ்ட் வசீகரனிடம் (ரஜினிகாந்த்) பணியாற்றும் சயின்டிஸ்ட் ரிச்சர்டு என்ற கேரக்டரில்தான் அக்ஷய்குமார் நடிக்கிறாராம். பறவைகளை மிகவும் நேசிக்கும் கேரக்டராம் அவருக்கு. பில்லா 2 நடிகரான சுதான்சு பாண்டேவை அக்ஷய்குமார் சந்திக்கும் வரை எந்த பிரச்சனையும் ஏற்படாதாம். தன் தந்தை புரொபெஸர் போராவின் சாவிற்கு பழிவாங்கத் துடித்துக் கொண்டிருக்கும் சுதான்சு பாண்டே, அப்பாவி அக்ஷய்குமாரை கொடூரமான வில்லனாக மாற்றுவிடுகிறாராம். அதன் பிறகு சிட்டிக்கும், சயின்டிஸ்ட் ரிச்சர்டுக்கு நடக்கும் மோதல்தான 2.0 படத்தின் கதையாம்.