'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
விஜய்யின் சித்தி மகனான விக்ராந்த் பல படங்களில் நடித்தும் அவரால் முன்னணி நடிகராக முடியவில்லை. ஒரு கட்டத்தில் படங்கள் இல்லாமல் சும்மா இருந்த விக்ராந்துக்கு தான் நடித்த 'பாண்டியநாடு' படத்தில் வாய்ப்பு கொடுத்தார் விஷால். அந்தப் படத்தில் விஷாலின் நண்பனாகநடித்து வரவேற்பைப் பெற்றார் விக்ராந்த். அடுத்து, 'கெத்து' படத்தில் உதயநிதிக்கு வில்லனாக நடித்தார். ஆனாலும் விக்ராந்துக்கு சரியான 'பிரேக்' கிடைக்கவில்லை.
பாண்டியநாடு படத்தில் நடித்தபோது, விக்ராந்தை ஹீரோவாக வைத்து சொந்தப்படம் தயாரிக்கப்போவதாக அறிவித்தார் விஷால். ஆனால் சொன்னபடி அவர் செய்யவில்லை. அந்தப்படம் எப்போது துவங்கும் என்று தெரியவில்லை. இந்நிலையில், இனி யாரையும் நம்பி பிரயோஜனமில்லை என்ற முடிவுக்கு விக்ராந்த் கிடைக்கும் வேடங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் 'கவண்' படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கும் விக்ராந்த், சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் 'வெண்ணிலா கபடி குழு படத்தின்' இரண்டாம் பாகத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தற்போது சமுத்திரக்கனி இயக்கி நடிக்கவிருக்கும் படமொன்றிலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் விக்ராந்த். தொண்டன் என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 2 ஆவது வாரத்தில் துவங்குகிறது. ஆம்புலன்ஸில் பணியாற்றுபவர்களைப் பற்றிய கதை இது.