'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
பிரியங்கா சோப்ரா நடித்துள்ள ஹாலிவுட் படமான பேவாட்ச் படத்தின் ரிலீஸ் தேதி ஒருவாரம் தள்ளிபோய் உள்ளது. பாலிவுட்டின் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட்டின் பிரபல சீரியலான குவாண்டிகோ மூலம் பிரபலமானார். அப்படியே பேவாட்ச் எனும் ஹாலிவுட் படத்திலும் நடித்தார். இந்தப்படத்தில் பிரியங்காவுடன் டுவைன் ஜான்சன் நடித்திருக்கிறார். செத் கார்டன் இயக்கியிருக்கிறார், பாரமன்ட் பிக்சர்ஸ் தயாரித்திருக்கிறது. இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் பணிகள் நடந்து வருகிறது. முன்னதாக இப்படம் மே 19ம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, இதன் ரிலீஸ் தேதி ஒருவாரம் தள்ளிபோய் உள்ளது, அதாவது மே 26-ம் தேதி ரிலீஸாக இருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது.